நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார் விபத்துக்குள்ளானது?

சென்னையில் நேற்று இரவு
நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார் விபத்துக்கு உள்ளானதாக வெளி வந்த செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

‘இருட்டுஅறையில் முரட்டுக் குத்து’ என்ற படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகை யாஷிகா அனந்த், பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கிட்டத்தட்ட இறுதிப்போட்டி வரை நெருங்கினார். 

இந்த நிலையில் நேற்று இரவு நடிகை யாஷிகா அனந்த் தனது நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது அந்த கார் நுங்கம்பாக்கம் அருகே சென்றபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனையடுத்து அந்த கார், சாலையில் சென்று கொண்டிருந்த டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவர் மீது மோதி விபத்துக்குள்ளதான செய்திகள் வெளியாகி உள்ளது 

இந்த விபத்தில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர் பரத் என்பவர் படுகாயமடைந்து அவர் சென்னை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர் 

இந்த காரில் இருந்தவர்கள் அதிகமாக மது அருந்தியுள்ளதாகவும், இந்த காரில் வந்த யாஷிகா அனந்த், விபத்து ஏற்பட்டதும் அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் காரில் யாஷிகா ஆனந்த் சென்றதாகவோ, அவர் அதிகமாக மது அருந்தியிருந்ததாகவோ பரவி வரும் தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.
 

error: Content is protected !!