பிரபல நடன இயக்குனர் மற்றும் நடிகையின் இல்லம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்*
சமீபத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஹிந்து கோவில்கள் குறித்து சர்ச்சையான கருத்து ஒன்றை பதிவு செய்திருந்தார்.
இதற்கு நடன இயக்குனர் நடிகை காயத்திரி ரகுராம் எதிர்ப்பு தெரிவித்து கடுமையான கருத்துக்களை பதிவு செய்து வந்தார்.
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குறித்து, சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்ட நடன இயக்குனர் நடிகை காயத்ரி ரகுராம் வீட்டை முற்றுகையிட்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது காயத்தி ரகுராமுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.