பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் உடல் நல்லடக்கதின் போது தளபதி நடிகர் விஜய் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.

சென்னை : 26 செப்டம்பர் 2020

சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணிப் பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் நேற்று மதியம் 1.04 மணி அளவில் காலமானார். அவருக்கு வயது 74

( 1946 2020 )

அவரது மறைவுக்கு திரையுலகினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் உடல் நலக்குறைவால் நேற்று செப்டம்பர் 25 ஆம் தேதி மதியம் 1.04 மணி அளவில் காலமானார்.

அவருடைய மறைவிற்கு ரசிகர்கள் அரசியல்வாதிகள் திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவருடைய ரசிகர்கள் பலரும் தங்கள் குடும்பத்தில் ஒருவரை இழுந்து வாடுவது போன்று காணப்படுகிறார்கள்.

பிரபல பின்னணிப் பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களுடைய உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் பிரபல பின்னணிப் பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் உடல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காம் தார் நகர் இல்லத்திலிருந்து தாமரை பக்கத்தில் உள்ள பன்னை இல்லத்திற்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அதன்படியே சென்னையை அடுத்துள்ள செங்குன்றத்தை அடுத்த தாமரைப்பாக்கம் என்ற கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டிற்கு எஸ்பி பாலசுப்ரமணியன் உடல் கொண்டு செல்லப்பட்டு அங்கு அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அங்கு அவரது உடல் 12.30 மணி அளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தாமரை பக்கத்தில் உள்ள உடலுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் உடலுக்கு அவருடைய மகன் எஸ் பி பி சரண் அவர்கள் இறுதிச் சடங்குகளை செய்தார்.

அங்கு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பாலசுப்பிரமணியத்தின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

நேரில் வந்து அஞ்சலி செலுத்திய பின்னணி பாடகர் மனோ, நடிகர் அர்ஜுன், இயக்குனர் இமயம் பாரதிராஜா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், இயக்குனர் அமீர், உள்ளிட்டவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் எஸ் பி பாலசுப்ரமணியம் உடலுக்கு தளபதி நடிகர் விஜய் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.

மேலும் அவர்களின் மகன் எஸ்பிபி சரணிடம் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார் தளபதி நடிகர் விஜய்.

பாடும் நிலா பாலு அவர்களின் உடல் நல்ல அடக்கம் செய்யப்பட்டது.

சற்று நேரத்தில் இனி மண்ணில் எந்த எஸ் பி பி யின் இனிய குரல் ஒலித்தது ஆனால் விண்ணில் இருக்கும் காற்றுகளில் ஒலிக்கட்டும்.