பிரபல பின்னணி பாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகம் உடல் நலகுறைவால் நேற்று இரவு காலமானார்.

சென்னை 27 டிசம்பர் 2021 பிரபல பின்னணி பாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகம் உடல் நலகுறைவால் நேற்று இரவு காலமானார்

பிரபல திரைப்பட பின்னணி பாடகர் மற்றும் நடிகர் மாணிக்க விநாயகம் உடல் நலகுறைவு காரணமாக இன்று உயிரிழந்தார்.

அவருடைய இயற்கை பெயர் வழுவூர் மாணிக்க விநாயகம் ராமய்யா பிள்ளை ஆவார்.

இவர் ஒரு பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர் பி. இராமையா பிள்ளையின் இளைய மகனாவார்.

நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் 2001ம் ஆண்டு வெளிவந்த தில் திரைப்படம் மூலம் பாடகராக தமிழ் திரைப்பட உலகில் அறிமுகமானவர் மாணிக்க விநாயகம்.

அவரின் தமிழ் திரைப்பட உலகில் அறிமுகமான வருடம் 2001 – 2021 திரைப்பட உலகில் 20 ஆண்டு காலங்கள் பாடகராகவும் நடிகராகவும் வலம் வந்தார்.

அதைத் தொடர்ந்து தவசி கன்னத்தில் முத்தமிட்டால் ரன் ரோஜாக்கூட்டம், ஜெயம், இயற்கை, நியூ, சந்திரமுகி, சிங்கம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முன்னணி பாடகராக வலம் வந்தார்.

அவர் பாடகராவும், நடிகராகவும் திரைப்பட உலகில் பிரபலமானார்.

தனுஷ் நடிப்பில் வெளிவந்த திருடா திருடி திரைப்படத்தின் மூலம் நடிகராக இயக்குனர் சுப்பிரமணியம் சிவா அறிமுகப்படுத்தினார்.

இவர் பிறந்தது 10 டிசம்பர் 1943 அவருடைய மறைவு 26 டிசம்பர் 2021தற்போது அவருக்கு 78 வயதாகும்.

பிரபல பின்னணி பாடகர் நடிகர் மாணிக்க விநாயகத்திற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் சிகிச்சை பலன் இன்றி அவர் காலமானார்.

பின்னணி பாடகர் மாணிக்க விநாயகத்தின் மறைவு குறித்து அறிந்த திரைத்துறையினர், ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.