பிறந்த நாளில் இசைஞானி இளையராஜா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இசைஞானி இளையராஜா நேற்று தனது 76வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார். கமல்ஹாசன் உள்பட பல பிரமுகர்கள் நேரிலும், தொலைபேசியிலும் சமூக வலைத்தளங்கள் மூலமும் இளையராஜாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இந்நிலையில், தென்னிந்திய திரையிசை கலைஞர்கள் சங்கத்திற்கான கட்டடத்தை தனது சொந்த செலவில் கட்டித்தர உள்ளதாக இசைஞானி இளையராஜா நேற்று நடைபெற்ற தனது பிறந்த நாள் இசைநிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.