Monday, September 20
Shadow

பிஸ்கோத் திரை விமர்சனம் ரேட்டிங் – 2.5 /5

நடிப்பு – சந்தானம், தாரா அலிஷா, ஸ்வாதி முப்பலா, பெர்ரி, ஆடுகளம் நரேன், ஆனந்த் ராஜ், சௌகார் ஜானகி, மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர் மற்றும் பலர்.

தயாரிப்பு – மசாலா பிக்ஸ் ஆர் கண்ணன்

இயக்கம் – ஆர்.கண்ணன்

ஒளிப்பதிவு – சண்முக சுந்தரம்

எடிட்டிங் – ஆர் .கே. செல்வா

இசை – ரதன்

மக்கள் தொடர்பு – ஜான்சன்.

வெளியான தேதி – 14 நவம்பர் 2020

ரேட்டிங் – 2.5 /5

2008ல் ஹாலிவுட்டில் வெளிவந்த
ஆடம் ஷாங்க்மேன் இயக்கத்தில் ஆடம் சாண்ட்லர் நடித்து வெளிவந்த திரைப்படம் ‘பெட்டைம் ஸ்டோரீஸ்’

அந்த திரைப்படத்தைத் காப்பியடித்து எடுக்கப்பட்ட திரைப்படம்தான் சந்தனம் நடிப்பில் தீபாவளிக்கு வெளி வந்துள்ள ‘பிஸ்கோத்’ திரைப்படம்.

பெட் டைம் ஸ்டோரிஸ் என்ற படத்தை பல மாற்றங்களுடன் தமிழ் திரைப்பட உலகிற்கு ஏற்ற படி மாற்றி கொஞ்சம் ஸ்பூப் சமாச்சாரங்களையும் சேர்த்து பிஸ்கோத் திரைப்படத்தில் ரசிகர்களை சிரிக்க வைக்க முயற்சி செய்து இருக்கிறார் இயக்குனர் ஆர்.கண்ணன்.

இப்படிப்பட்ட காலத்தில் திரைப்படங்களில் ஏதோ ஒரு காட்சி காப்பியடிக்கப்பட்டு எடுத்தால் கூட அது எந்த உலக மொழித் திரைப்படத்திலிருந்து வந்தது என ரசிகர்கள் உடனடியாக சொல்லிவிடுகிறார்கள் அந்த அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்திருக்கிறது.

2020ஆம் ஆண்டு ஒடிடி இணையதளங்கள் சமூக வலைத்தளங்கள் என பலவும் பெரும் வளர்ச்சியைக் கண்டு நிற்கிறது.

கடந்த மார்ச் மாதத்தில் மூடப்பட்ட திரையரங்குகள் தற்போது மீண்டும் நவம்பர் 10 முதல் திறக்கப்பட்டுள்ளன.

திரையரங்குகள் திறக்கப் பட்டாலும் 50 சதவீத இருக்கைள் மட்டுமே இது சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தீபாவளிக்கு வெளியாக வேண்டிய திரைப்படங்கள் 2021 க்கு தள்ளி வைக்கப்பட்டாலும் கடந்த மே மாதம் வெளியாக வேண்டிய நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்த பிஸ்கோத் திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகியுள்ளது.

இந்த பிஸ்கோத் திரைப்படத்தின் கதாநாயகன் சந்தானம் மூன்று கெட்டப்பில் நடித்துள்ளார்.

நடிகர் சந்தானம் திரைப்படம் என்றால் ரசிகர்கள் எல்லோருக்கும் முகத்தில் ஒரு சின்ன சிரிப்பு இருக்கும் தானே அந்த சிரிப்போடு திரையரங்குக்குள் வந்தவர்களை சிரிக்க வைத்து மகிழ்ச்சியால் மனதை நிறைத்து வெளியே அனுப்புகிறார்.

சிரிப்புக்கு என உத்தரவாதம் கொடுக்கலாம்

ஒரு முழு ஆக்‌ஷன் கதாநாயகனாக இல்லாமல் இயல்பான கேரக்டரில் நடிகர் சந்தானத்தை இந்த பிஸ்கோத் திரைப்படத்தில் பார்க்க முடிந்ததை ரசிகர்களின் முகபாவனை மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது.

கதாநாயகனாக மூன்று கேரக்டரில் மூன்று விதமாக பார்க்கலாம்.

Read Also  இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு திரை விமர்சனம்

மூன்றும் மூன்று விதமான ஸ்டைல் தான். ஆனால் காமெடியில் மூவருக்கும் கவுண்டர் விசயத்தில் ஒரே ஒற்றுமை தான். ஆனால் அலட்டல் இல்லை.

இந்த திரைப்படத்தில் ஒரு பிஸ்கட் ஃபேக்டரி முக்கியமான கதாப்பாத்திரம் போல் வருகிறது.

அதனால்தான் திரைப்படத்துக்குப் ‘பிஸ்கோத்’ என்று பெயர் வைத்திருக்கிறார்களாம்.

குடிசை தொழிலாக கதாநாயகன் சந்தானம் அவருடைய தந்தை ஆடுகளம் நரேன் பிஸ்கோத் தயாரித்து விற்பனை செய்கிறார்.

பிஸ்கோத் தயாரிக்கும் தொழிலில் அவருக்கு உதவியாக அவரின் நண்பன் ஆனந்த்ராஜ். கூடவே பயணிக்கிறார்.

தனது மகனை உயர்ந்த இடத்தில் வைக்க வேண்டும்.

என வழக்கமான தந்தையாக ஆடுகளம் நரேனுக்கு ஒரு ஆசை இந்த நிலையில் கதாநாயகன் சந்தானம் குழந்தையாக இருக்கும் போது அவருடைய தந்தை திடீரென இறந்துவிடுகிறார்.

அதன் பின் கதாநாயகன் சந்தானம் என்ன ஆனார்? பிஸ்கோத் தயாரிக்கும் தொழில் என்ன ஆனது? அப்பா நரேனின் ஆசை நிறைவேறியதா இல்லையா இதுதான் பிஸ்கோத் திரைப்படத்தின் மீதிக் கதை.

தனது அப்பா துவக்கிய அதே நிறுவனத்தில் ஒரு எந்த கவுரவமும் பார்க்காமல் வேலை பார்த்து வருகிறார் கதாநாயகன் சந்தானம்.

ஆனந்த்ராஜின் மகள் மீது சந்தானத்திற்கு கொஞ்சம் காதலும் உண்டு.

அதே ஊரில் இருக்கும் ஒரு முதியோர் இல்லத்திற்கு அடிகடி வருவது வழக்கமாய் இருக்கிறார் கதாநாயகன் சந்தானம்.

முதியோர் இல்லத்தில்
இருக்கும் பெரியவர்களுக்கு வேண்டியதையெல்லாம் உதவி செய்து கொடுக்கிறார்.
கதாநாயகன் சந்தானம்.

ஒரு நாள் அந்த முதியோர் இல்லத்தை கவனித்துக் கொள்ளும் சிஸ்டர் வெளியூருக்குப் போக, நள்ளிரவில் பாதுகாப்புக்காக அங்கே தங்குவதற்காக வருகிறார் கதாநாயகன் சந்தானம்.

அங்கு பழம் பெரும் நடிகை சௌகார் ஜானகிக்கு சந்திக்கிறார்.

அந்த இல்லத்தில் வந்து தங்கி இருக்கும் வயதான பாட்டி சௌகார் ஜானகி அடிக்கடி கதை சொல்லும் பழக்கம் உடையவர். அவர் சொல்லும் கதைகள் சந்தானம் வாழ்வில் நிஜமாக நடக்கிறது.

கலை நயம் குறையாத அதே முகபாவம். அவர் கதை சொல்லும் போது இன்னும் கொஞ்சம் அழகு.

கதாநாயகி தாரா அலிஷா பெர்ரி இவரை எங்கேயோ பார்த்தது போல் இருக்கிறதே யோசிக்க வேண்டாம்? Al திரைப்படத்தில் இதே சந்தானத்துடன் ஜோடி சேர்ந்தவர்தான் இந்த தாரா அலிஷா.

நன்றாக நடித்திருப்பது தாரா அலிஷாதான். அழகான முகத்தில் காதல், கோபம், அன்பு, பாசம் எல்லாவற்றையும் காண்பித்திருக்கிறார்.

அவர் இருக்கின்ற காட்சிகளில் ஸ்கிரீனே அழகாகத் தெரிந்தது. இன்னொரு ஹீரோயினாக ஸ்வாதி முப்பாலாவும் நடித்திருக்கிறார்.

ஆனால் முகவெட்டை ரசிக்க முடியவில்லை. எப்படி தேர்வு செய்தார்களோ.. தெரியவில்லை.

கதாநாயகன் சந்தானத்தின் ஒரு வார்த்தை கவுன்ட்டர்களை நம்பி இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள்.

Read Also  100 - திரைவிமர்சனம்

அவருடன் உதவியாளர் ராஜேந்திரன், மனோகர் என இரண்டு உதவியாளர்களை
வைத்துக் கொண்டு அவர்களையும் கலாய்த்து அவரிடம் பேச வருபவர்களையும் கலாய்த்து வழக்கமாக என்ன செய்வாரோ அதை மட்டுமே செய்திருக்கிறார்.

சந்தானத்தின் உதவியாளராக வரும் ‘மொட்டை’ ராஜேந்திரனும், மனோகரும் மொக்கையாக நடித்திருக்கிறார்கள்.

மற்றொரு ஆறுதல் ஆடுகளம்’ நரேன்தான் இருந்த காட்சிகளிலெல்லாம் தன்னுடைய குரலாலும் நடிப்பாலும் கொஞ்சமேனும் ரசிகர்களை ரசிக்க வைக்கிறார்.

ஒளிப்பதிவாளர் சண்முகசுந்தரத்தில் ஒளிப்பதிவில் எந்த குற்றமும் இல்லை குறையில்லை.

அவருக்குக் கொடுக்கப்பட்ட வசதிகளை வைத்து கொண்டு அழகாக படமெடுத்திருக்கிறார்.

திரைப்படத்தில் இசையும் பாடல்களும் அதிகமாக மனதை கவரவில்லை.

நிறைய காட்சிகளை எடுத்து கட் செய்து எறிந்திருப்பதால் திரைக்கதையில் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாமல் பல காட்சிகள் தொடர்பு இல்லாமல் இருக்கிறது.

பிஸ்கோத் என்றால் மொறு மொறு என இருக்க வேண்டும் ஆனால் அந்த பிஸ்கோத்து நமுத்து போய்விட்டது.

CLOSE
CLOSE