பிஸ்தா’ படத்தின் பாடலை வெளியீடும் திரை பிரபலங்கள்

‘மெட்ரோ’ படத்தின் படத் தொகுப்பாளரான ரமேஷ் பாரதி இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘பிஸ்தா’. இந்த படத்தில் நாயகனாக ‘மெட்ரோ’ சிரிஷ் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தின் நாயகிகளாக மிருதுளா முரளி மற்றும் அருந்ததி நாயர் ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் “அழகுள்ள ராசாத்தி” என்ற பாடலை இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி ஆகியோர் இணைந்து ஆகஸ்ட் 31ம் தேதி இரவு 12மணிக்கு வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.