பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தின் டிரெய்லரை அமேசான் பிரைம் வீடியோ இன்று வெளியிட்டுள்ளது.

பரபரப்பான இந்த திரைப்படம் பிரைம் வீடியோவில் உலகளாவிய அளவில் நேரடியாக வெளியாகும் முதல் தமிழ்த் திரைப்படமாகும்.

2D எண்டர்டெயின்மெண்டால் தயாரிக்கப்பட்டுள்ள ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தில், ஜோதிகா, பார்த்திபன், K.பாக்யராஜ், தியாகராஜன், பிரதாப் போத்தன் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். 200 நாடுகளில், பிரைம் வீடியோ வழியாக பிரத்தியேகமாக வெளியாகவுள்ள இத்திரைப்படத்தை ஜே.ஜே.ப்ரட்ரிக் இயக்கியுள்ளார். இப்படம் மே 29ஆம் தேதி முதல் அமேசான் ப்ரைமில் வெளியாகிறது.

சமீபத்திய மற்றும் பிரத்தியேக திரைப்படங்கள், தொலைகாட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்- அப் காமெடி, பிரைம் ஒரிஜினல் சீரீஸ் ஆகியவற்றின் அன்லிமிடெட் ஸ்ட்ரீமிங், அமேசான் பிரைம் மியூசிக் வழியாக விளம்பரம் அற்ற இசை, இந்தியாவின் மிகப்பெரிய தயாரிப்புகள் தொகுப்பிற்கான இலவச துரித டெலிவரி, முதன்மையான டீல்களுக்கான முன்கூட்டிய அணுகும் வசதி, பிரைம் ரீடிங் வழியாக அன்லிமிடெட் ரீடிங் போன்ற அற்புதமான மதிப்புமிக்க வசதிகளை பிரதி மாதம் வெறும் ₹129 கட்டணத்தில் பிரைம் வழங்குகிறது.

அமேசான் பிரைம் வீடியோ இன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. இது நேர்மையான ஒரு வழக்கறிஞர்  தவறாக தண்டிக்கப்பட்ட ஒரு அப்பாவி பெண்ணை விடுவிக்க முயற்சிக்கும் கதையாகும். 2D என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த சட்ட நாடகப் படத்தில், ஜோதிகா, பார்த்திபன், K.பாக்யராஜ், தியாகராஜன், பிரதாப் போத்தன் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் உட்பட பல்வேறு ஆற்றல் மிக்க நடிகர்கள் உள்ளனர். அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக உலகளவில் திரையிடப்படவுள்ள முதல் தமிழ் படமாகத் திகழவுள்ள ‘பொன்மகள் வந்தாள்’, பிரைம் உறுப்பினர்களுக்கு மே 29 முதல் 200 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தின் கதை என்னவென்றால், 2004-ம் ஆண்டு முடிக்கப்பட்ட ஒரு வழக்கை மீண்டும் தொடங்குகிறார் ஊட்டியில் வசிக்கும் ‘பெட்டிஷன்’ பெதுராஜ். அவரது மகளான வெண்பா ஒரு ஆர்வமுள்ள வழக்கறிஞர்.  உண்மையை வெளிப்படுத்த அனைத்து நெளிவுசுளிவுகளிலும் பயணிக்கும் திறன் கொண்டவரான அவர் அந்த வழக்கின் உண்மையைக் கண்டறிகிறார். பொய்யாக ஜோடிக்கப்பட்ட அந்த வழக்கில், அனைத்து சவால்களையும் கடந்து, புத்திசாலித்தனமாக எவ்வாறு வாதாடுகிறார் என்பதே இப்படத்தின் திரைக்கதை.  ஜோதி நிரபராதி என்பதை வெண்பா நிரூபித்தாரா என்னும் பரபரப்பான இறுதிக்காட்சிகளை பிரைம் வீடியோ நேயர்கள் கண்டு களிக்கலாம்.

இது குறித்து அமேசான் பிரைம் வீடியோவின் உள்ளடக்க இயக்குநரான விஜய் சுப்பிரமணியம் கூறியுள்ளதாவது:

“அமேசான் பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக ‘பொன்மகள் வந்தாள்’ வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம், எங்கள் பார்வையாளர்களுக்கு இன்னொரு உயர்தர திரைப்படத்தை காண்பிப்பதிலும் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

இத்திரைப்படத்தை உலகாளவிய  அளவில் 200க்கும் அதிகமான நாடுகளுக்கு கொண்டுசெல்வதன் மூலம் தமிழ்சினிமாவின் இந்த  இதுபோன்ற உலகளாவிய திரைப்படத் திரையிடல்கள் மூலம், எங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வசதிக்கேற்ப எப்போதும், எங்கேயும் பார்க்கும்படி தொடர்ந்து சிறப்பான திரைப்பட அனுபவங்களை தருகிறோம்.

இவ்வாறு விஜய் சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

இது குறித்து 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் கூறியுள்ளதாவது:

“‘பொன்மகள் வந்தாள்’ வெளியீட்டிற்காக அமேசான் பிரைம் வீடியோவுடன் இணைவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் இந்த அற்புதமான திரைப்படத்தை இந்தியாவிலும், உலகெங்கிலும் இருந்து பார்த்து ரசிக்க முடியும். தமிழ்மொழியில் பரபரப்பாக எழுதப்பட்டுள்ள இத்திரைப்படம், பார்வையாளர்களை தங்கள் இருக்கையின் விளிம்பிற்கு கொண்டுவரக்கூடிய அளவிற்கு உருவாக்கப்பட்டுள்ளது. ‘பொன்மகள் வந்தாள்’ மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் ஆகும். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு, அற்புதமான வரவேற்பு கிடைத்தது, தொடர்ந்து பலரும் படம் குறித்த மேலும் தகவல்களை வெளியிடுமாறு பலரும் கோரிக்கை விடுத்தனர். இந்த படத்தை உலகளாவிய பார்வையாளர்களிடம் கொண்டு செல்வதற்கும், பார்வையாளர்களுக்கு தமிழ் சினிமாவின் சிறந்ததொரு படைப்பை வெளியிடும் நாளையும் நாங்கள் ஆவலோடு எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்” என்றும் கூறினார்.

‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம், ஜோதிகா மற்றும் சூர்யாவின்  2D என்டர்டெயின்மென்ட்  நிறுவனத்தின் தயாரிப்பு ஆகும். சூரியா சிவகுமார் இப்படத்தை தயாரித்துள்ளார். ஜே.ஜே.ப்ரட்ரிக் இப்படத்தை இயக்கியுள்ளார்.

‘பொன்மகள் வந்தாள்’ பிரைம் வீடியோ பட்டியலில் உள்ள, பல்வேறு தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மற்றும் ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டின் சமீபத்திய மற்றும் பிரத்தியேக திரைப்படங்களுடன் இணைந்துள்ளது. இதில்,  Paatal Lok, The Family Man, Four More Shots Please, Mirzapur, Inside Edge, The Forgotten Army மற்றும் Made In Heaven போன்ற இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அமேசான் ஒரிஜனல் தொடர்கள் மற்றும் விருதுகள்-வென்ற மற்றும் பரவலான பாராட்டுதல்களை வென்ற, உலகளாவிய அமேசான் ஒரிஜினல் தொடர்களான Tom Clancy’s Jack Ryan, The Boys, Hunters, Fleabag  மற்றும் The Marvelous Mrs.Maisel போன்றவைகள் இதில் உட்படும். இவைகள் அனைத்தும் எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றி அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு கிடைக்கப்பெறும். இச்சேவையில் இந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் கிடைக்கப்பெறும் உள்ளடக்கங்களும் உட்பட்டுள்ளன. Gulabo Sitabo, Shakuntala Devi, Penguin, Sufiyum Sujatayum, Law மற்றும் French Biryani உட்பட்ட உலகளாவிய ப்ரீமியம் செய்யப்படவுள்ள இந்தியத் திரைப்படங்களில் ஒன்றாக ஏழாவது திரைப்படமாக ‘பொன்மகள் வந்தாள்’ திகழ்வது குறிப்பிடத்தக்கதாகும்.

ஸ்மார்ட் டிவிகள், மொபைல் சாதனங்கள், ஃபயர் டிவி, ஃபயர் டிவி ஸ்டிக், ஃபயர் டேப்ளெட்கள், ஆப்பிள் டிவி போன்றவற்றின் பிரைம் வீடியோ ஆப் – ல், பிரைம் உறுப்பினர்களால், Ponmagal Vandhal – ஐ எந்த நேரத்திலும் மற்றும் எந்த இடத்திலும் பார்வையிட முடியும். மேலும், பிரைம் வீடியோ ஆப்பில், பிரைம் உறுப்பினர்களால் அவர்களது மொபைல் சாதனங்கள் மற்றும் டேப்ளெட்களில் அனைத்து அத்தியாயங்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் மற்றும் எந்தவொரு இடத்திலும் ஆஃப்லைனில், எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றி பார்வையிட முடியும்.  பிரைம் வீடியோ தற்போது இந்தியாவில், பிரைம் உறுப்பினர்களுக்கு எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றி, ஆண்டிற்கு வெறும் ₹999 அல்லது பிரதி மாதம் ₹129 என்னும் கட்டணத்தில் கிடைக்கப்பெறும். புதிய வாடிக்கையாளர்கள் மேலும் அறிந்து கொள்ள வருகை தரவும்  www.amazon.in/prime மற்றும் 30-நாட்கள் டிரையலுக்கு சப்ஸ்கிரைப் செய்யவும்.

                                                                        –முடிவுற்றது—

 அமேசான் பிரைம் வீடியோ குறித்து

பல்வேறு விருதுகளை வென்ற, அமேசான் ஒரிஜினல் தொடர்களின் தொகுப்புகள், ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் ஆகிய அனைத்து விரும்பத்தக்க விஷயங்களையும் ஒரே இடத்தில் சுலபமாகக் கண்டறியத்தக்க வகையில் வழங்கும், பிரைம் உறுப்பினர்களுக்கான ஒரு ப்ரீமியம் ஸ்ட்ரீமிங் சேவை பிரைம் வீடியோ ஆகும். மேலும் அறிய, பார்க்கவும் PrimeVideo.com.

  • பிரைம் வீடியோவில் உட்பட்டுள்ளவை:   ‘பொன்மகள் வந்தாள்’ ஆயிரக்கணக்கான தொலைகாட்சி நிகழ்ச்சிகள், ஹாலிவுட் மற்றும் பாலிவுட் திரைப்படங்களுடன் இணைந்துள்ளது. இதில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அமேசான் ஒரிஜினல் தொடர்களான The Family Man, Mirzapur, Inside Edge மற்றும் Made In Heaven, உலகளாவிய அளவிலான பாராட்டுதல்களைப் பெற்றுள்ள உலகளாவிய அமேசான் ஒரிஜினல் தொடர்களான Tom Clancy’