பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை OTT இணையதளமான அமேசான் ப்ரைமில் வெளியீடு செய்ய 2D நிறுவனம் திட்டம்.
2D ENTERTAINMENT சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில் இயக்குனர் ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் நடிக்க ஜோதிகா நடித்துள்ள திரைப்படம் பொன்மகள் வந்தாள்.
இந்த திரைப்படம் மார்ச் இறுதியில் திரைக்கு வரவிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளியாகவில்லை.
இதன் வெளியீட்டு உரிமையை சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் வாங்கியிருந்தது.
மார்ச் 17ம் தேதி இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும் ரத்தானது குறிப்பிடத்தக்கது.
தற்போதும் கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
ஊரடங்கு உத்தரவு விரைவில் தளர்த்தப்பட்டாலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒன்றான தியேட்டர்களை கண்டிப்பாக நிச்சயம் திறக்க விடமாட்டார்கள்.
மேலும் பல திரைப்படங்கள் ரிலீசுக்கு காத்திருப்பதால் தியேட்டர் கிடைப்பதிலும் கண்டிப்பாக சிக்கல்கள் உருவாகும்.
இந்த நிலையில் பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை நேரடியாக OTT இணையதளமான அமேசான் ப்ரைமில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை.
கிட்டதட்ட ரூ. 4 கோடியில் தயாரான இந்த படத்தை 9 கோடி ரூபாய் கொடுத்து அமேசான் வாங்கியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
மே மாதம் ரிலீஸ் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.