பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்திற்காக நடிகை ஜோதிகாவுக்கு நடிகர் சூர்யா கொடுத்த சம்பளம் எவ்வளவு.?
நடிகர் சூர்யா 2டி என்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் புதுமுக இயக்குனர் ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் நடிகை ஜோதிகா, கே.பாக்யராஜ், ரா.பார்த்திபன், ஆர்.பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் பஞ்சுசுப்பு உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘பொன்மகள் வந்தாள்’.
2டி நிறுவனம் சார்பாக நடிகர் சூர்யா இந்த பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பின் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள இந்த நிலையில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் இனையத்தளமான அமேசான் பிரைம் விடியோவில் OTT இனையத்தளத்தில் திரைப்படம் வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் நடிகர் சூர்யா – ஜோதிகா கலந்து கொண்டு இணைந்து பேட்டிகளை அளித்து வருகின்றனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது…
’பொன்மகள் வந்தாள்’ படத்துக்கு ஜோதிகாவின் சம்பளம் என்ன?” என்பதற்கு “2 டி நிறுவனமே ஜோதிகாவின் சம்பளத்தை வைத்துத்தான் நடக்கிறது. நாங்கள் எங்களுக்குள் மாற்றி மாற்றி பணச் சுழற்சி MONEY ROTATION செய்வோம் ” என்றார்.
அதற்கு ஜோதிகா, “இல்லை இல்லை..
எனக்கு கிடைத்த மிகப்பெரிய சம்பளமே சூர்யா ரசிகர்கள் தான்.
நடிகைகளுக்கு ரசிகர் மன்றம் அவ்வளவு இருக்காது. எனது பட ட்ரெய்லர், டீஸர் வந்தால் என் ரசிகர்கள் பார்ப்பதற்குள் சூர்யா ரசிகர்கள் பெரிய வரவேற்பை கொடுக்கிறார்கள்” என்றார் நடிகை ஜோதிகா.