கதாநாயகியின் அம்மாவிடம் அட்ஜஸ்ட்மெண்ட் கேட்ட பிரபலங்கள் நடிகை கல்யாணியை கதற விட்ட தமிழ் திரைப்பட துறை.!

தமிழ் திரைப்பட உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை கல்யாணி.

தனது பெயரை பூர்ணிமா என மாற்றிய பின் கதாநாயகியாக சில திரைப்படங்களில் நடித்தார்.

திரைப்பட வாய்ப்பு குறைந்த பின் டிவிகளில் தொகுப்பாளினியாக வலம் வந்தார்.

பின்னர் ‘பிரிவோம் சந்திப்போம், அண்ணாமலை, ஆண்டாள் அழகர் உட்பட பல டிவி தொடர்களில் நடித்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ரோகித் என்பவரை திருமணம் செய்து கொண்டு கர்நாடகாவில் செட்டில் ஆனார். திரைப்பட துறைக்கு முழுக்கு போட்டுவிட்டார்.

தற்போது அவர்களுக்கு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் தான் நடிப்பில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து ஓபனாக பேசியுள்ளார் நடிகை கல்யாணி.

அதில்..

எங்க திரைப்படத்துல உங்க மகள்தான் ஹீரோயின். ஆனால் அட்ஜஸ்ட்மென்ட் செய்யனும் என்பார்கள்.

அட்ஜெஸ்மெண்ட் என்றால் கால்ஷீட் தேதி என நினைத்து அம்மா ஓகே சொல்வார்.

பின்னர் தான் அட்ஜெஸ்மெண்ட் என்பது வேறு மாதிரியான பொருள் என அம்மாவுக்கு தெரிந்தது.

டிவியில் பணி புரிந்த போதும் இந்த பிரச்னை வந்தது… ஒப்புக் கொள்ளவில்லை என்பதால் வந்த வாய்ப்புகளும் போய்விட்டது…”

நடிகை கல்யாணி ஓப்பனாக தெரிவித்துள்ளார்

error: Content is protected !!