Tuesday, July 14
Shadow

பொன்மகள் வந்தாள் திரை விமர்சனம் ரேட்டிங் – 2.5 / 5

நடிப்பு – ஜோதிகா, கே.பாக்யராஜ், ரா.பார்த்திபன், தியாகராஜன், பிரதாப் போத்தன், ஆர். பாண்டியராஜன் பஞ்சுசுப்பு மற்றும் பலர்

தயாரிப்பு – 2டி என்டர்டெயின்மென்ட்

இயக்கம் – ஜே.ஜே.ப்ரெட்ரிக்

ஒளிப்பதிவு – ராம்ஜி

எடிட்டிங் – ரூபன்

இசை – கோவிந்த் வசந்தா

மக்கள் தொடர்பு – யுவராஜ்

திரைப்படம் வெளியான தேதி – தேதி – 29 மே 2020 (அமேசான் பிரைம்)

ரேட்டிங் – 2.5 / 5

 

தமிழ்த் திரைப்பட உலகில் முதன் முறையாக ஒரு முன்னணி நடிகை ஜோதிகா நடித்துள்ள திரைப்படம் திரையரங்குகளில் வெளிவராமல், OTT இனையத்தளமான அமேசான் பிரைம் விடியோவில் வெளியாகி உள்ளது.

தமிழ் திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக நேரடியாக OTT இனையத்தளத்தில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம்.

தமிழ் திரைப்பட உலகில் OTT இனையத்தளத்தில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை பெற்றிருக்கும் இந்த “பொன்மகள் வந்தாள்’ திரைப்படம்.

கொரானோ வைரஸ் நோய் தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் வெளியிட முடியாத காரணத்தால் இந்தப் திரைப்படத்தை ஓடிடி இனையத்தளத்தில் வெளியிட வேண்டிய சூழ்நிலை என திரைப்படம் சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் திரையரங்குகளில் அமர்ந்து மிக பெரிய ஸ்கிரீனில் திரைப்படம் பார்க்கும் ஒரு அனுபவம் மிகவும் அருமையாக இருக்கும்.

அவர் அவர் வீட்டில் அமர்ந்து கொண்டு டிவியில் பார்க்கும் போது நிச்சயம் கிடைக்க வாய்ப்பில்லை.

என்பது இந்தப் படத்தைப் பார்க்கும் போது நாம் அறிந்து கொண்ட உண்மை. பெரிய திரை, அதிர வைக்கும் ஒலி, திரையரங்குகளில் கூட்டமான ரசிகர்கள் செய்யும் ஆரவாரம் ஆகியவை வீட்டுக்குள் நாம் தனியாகவோ, குடும்பத்தாருடன் பார்க்கும் போது அந்த அனுபவம் கண்டிப்பாக நமக்கு கிடைக்காது.

இந்த நிலையில் 28ம் தேதி நள்ளிரவுக்கு முன்பாகவே வெளியான இந்த பொன்மகள் வந்தாள் திரைப்படத்தைப் பார்த்த போது திரையரங்குகளில் பார்த்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற கற்பனையில் பார்க்க வேண்டியதாயிற்று.

இந்த திரைப்படத்தில் நடிகை ஜோதிகா முதன் முறையாக வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

உலகம் முழுவதும் பெண் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் ஏன் வயதான பெண்களுக்கு கூட இந்த பாலியல் கொடுமைகள் அதிகம் நடப்பதாக அடிக்கடி தினசரி பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளிலும் பார்த்தும் படித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

என் இதற்கு எல்லாம் ஒரு விடிவுகாலம் கிடைக்காதா என பொது மக்களிடம் பல கேள்வி மக்கள் எழுப்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

Read Also  நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா - திரை விமர்சனம்

பாலியல் தொல்லைகளுக்குப் பின்னால் எவ்வளவு துயரம் இருக்கிறது என்பதை இந்த பொன்மகள் வந்தாள் திரைப்படம் மிகவும் உணர்வுபூர்வமாய் உருக்கமாய் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஜே.ஜே.ப்ரெட்ரிக்

புதுமுக இயக்குனர் ஜே.ஜே. பிரட்ரிக் எடுத்துக் கொண்ட கதை களம் மட்டுமே ஓகேதான்.

அதன்பின் ஒரு சில காட்சிகளில் மட்டுமே இயக்குனரின் முத்திரை பதித்து இருக்கிறது.

அதோடு இந்த திரைப்படத்தின் கிளைமாக்சில் காட்சி மட்டும் எதிர்பாராத ஒரு திருப்புமுனையை வைத்து ஆச்சரியப்படுத்துகிறார் இயக்குனர் ஜே.ஜே.ப்ரெட்ரிக்

ஊட்டியில் நடக்கும் சின்ன சின்ன பிரச்சினைகளுக்கெல்லாம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து பெட்டிஷன் பெத்துராஜ் எனப் பெயரெடுத்தவர் இயக்குனர் கே. பாக்யராஜ்.

2004ம் வருடம் பல பெண் குழந்தைகளை கடத்திக் கொன்றதாகவும் இரண்டு இளைஞர்களை சுட்டுக் கொன்றதாகவும் ஒரு வட மாநில பெண் ஒருவரை என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ஒரு வழக்கை கே.பாக்யராஜின் வளர்ப்பு மகளான வழக்கறிஞர் நடிகை ஜோதிகா தனது முதல் வழக்காக மீண்டும் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு கொண்டு வருகிறார்.

தங்களது பெண் குழந்தைகளைப் பறி கொடுத்த தாய்மார்கள் ஒரு கொலைக் குற்றவாளிக்கு ஆதரவளிப்பதா என நடிகை ஜோதிகாவுக்கு எதிராகக் குரல் கொடுக்கிறார்கள்.

ஆனால் நடிகை ஜோதிகா அந்த வட மாநில பெண்ணின் மகள்தான் என்பதை நீதிமன்றத்தில் சொல்லி ஊர் மக்களை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி அந்த நீதிமன்றத்தையை அதிர வைத்து விடுகிறார்.

உண்மையான கொலை செய்த குற்றவாளி யார் என்பதை எப்படி இந்த உலகத்திற்கு அடையாளம் காட்டுகிறார் என்பதுதான் இந்த திரைப்படத்தின் மீதி கதை.

நடிகர் சூர்யாவை திருமணம் செய்தா பின்பு நடிக்க வந்த நடிகை ஜோதிகா சமூகப் பிரச்சினைகள் சார்ந்த கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அப்படிப்பட்ட ஒரு சமுகத்தில் நடந்த முக்கியமான பெண் குழந்தைகளின் பிரச்சினையை எதிர்கொள்ளும் வெண்பா என்ற வழக்கறிஞராக நடிகை ஜோதிகா மிகவும் அருமையாக நடித்து இருக்கிறார்.

அனுபவம் வாய்ந்த வக்கீல் கொலைகளுக்குப் பின்னணியில் உள்ள மிகப் பெரும் புள்ளி என இருந்தாலும் தனது வாதத்தை எடுத்து வைக்கும் விதத்தில் அவரது நடிப்பு மிகவும் மிரட்டலாக உள்ளது.

அதிலும் கிளைமாக்ஸ் காட்சியில் அவர் யாருக்காக எதற்காக நீதிமன்றத்தில் போராடினார் என்பதைத் தெரிந்து கொள்ளும் போது அந்தக் கதாபாத்திரத்தின் மீது ஒரு நல்ல மதிப்பு வந்துவிடுகிறது.

தன் நடிக்கும் திரைப்படங்களில் தனது சொந்தக்குரலில் டப்பிங் பேசும் போது சில தமிழ் வார்த்தைகளின் உச்சரிப்பை மட்டும் நடிகை ஜோதிகா அவர்கள் கொஞ்சம் சரி செய்து கொள்ள வேண்டும்.

நடிகை ஜோதிகாவை மட்டுமே சுற்றியும் ஒரே ஒரு நீதிமன்றத்தைச் சுற்றியுமே மொத்த திரைப்படமும் நகர்கிறது.

Read Also  சிக்ஸர் - திரை விமர்சனம்

சென்னையிலிருந்து ஊட்டிக்கு வந்து பெரும் தொழிலதிபரான தியாகராஜனுக்கு ஆஜராகும் வக்கீலாக பார்த்திபன்தான் அடிக்கடி கலகலப்பூட்டுகிறார்.

அந்த நீதிமன்றத்தில் நீதிபதி சொல்வதை நான் கண்டிப்பாக அனுமதிக்க மாட்டேன் என்று சொல்வதுதெல்லாம் திரைப்படங்களில் மட்டுமேதான் நடக்கும்.

பல ஏழை குழந்தைகளுக்கு படிப்பு செலவுகளை செய்து கொண்டு மிகவும் அமைதியாக, சாந்தமாக வந்து போகும் வில்லனாக தியாகராஜன். நீதிமன்றத்தில் அவருக்கும் நடிகை ஜோதிகாவுக்கும் நடக்கும் வாதம்தான் திரைப்படத்தில் அனல் பறக்கும் ஒரே காட்சி இருவருமே அந்தக் காட்சியில் முகம் துடிக்க நடித்திருக்கிறார்கள்.

இதே திரையரங்குகள் ஆக இருந்தால் அந்தக் காட்சிக்கு ரசிகர்களின் கைத்தட்டல் அதிகம் இருந்திருக்கும்.

ஜோதிகாவின் வளர்ப்பு அப்பாவாக கே. பாக்யராஜ். மக்களுக்கு நல்லதை செய்ய நினைக்கும் ஒரு சமூக ஆர்வலர். எவ்வளவு தேவையோ அவ்வளவு நடித்திருக்கிறார்.

பாண்டியராஜன் ஓர் சில காட்சிகளில் மட்டும் வருகிறார்.

பிரதாப்போத்தன் நீதிபதியாக அருமையாக நடித்திருக்கிறார்.

இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா உணர்வுபூர்மான 96 திரைப்படத்திற்கு இசையமைத்ததைப் போல இந்தப் திரைப்படத்திற்கும் இசையமைப்பார் என்று எதிர்பார்த்திருப்பார்கள் போலிருக்கிறது.

ஆனால், அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை போலும். உயிரோட்டமான காட்சிகளுக்குக் கூட தனது பின்னணி இசையில் உயிர் கொடுக்கமுடியாமல் தடுமாறி இருக்கிறார்.

ஊட்டியில் நடக்கும் கதை என்றாலும் நீதிமன்றத்திற்குள்தான் பெரும்பாலான காட்சிகள் இருக்கிறது.

இந்த திரைப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு என டைட்டிலில் வருகிறது.

பின்னணி இசையிலும்
ஒளிப்பதிவிலும் கொஞ்சம்
கவனம் செலுத்தி இருக்கலாம்.

இந்த வழக்குக்கு தாமதமாகக் கிடைக்கும் நீதியும் அநீதிதான் என்பதைச் சொல்ல வரும் திரைப்படம்தான்.

நல்ல கருத்துதான் நல்ல கதை அதை திரைப்படமக்கும் முயற்சியில் முழுவதும் வெற்றி பெறவில்லை இயக்குனர் – ஜே.ஜே.ப்ரெட்ரிக்.

தமிழ்த் திரைப்பட உலகில் 1984 வருடம் வெளி வந்த விதி திரைப்படத்தில் வரும் நீதிமன்றம் சம்மந்தமான காட்சிகள் அனைத்துமே மிகவும் அருமையாக இருக்கும்.

விதி திரைப் படத்தைப் பார்த்தாவது நீதிமன்ற காட்சிகள் எப்படி எல்லாம் இருக்கிறது என்று தெரிந்து கொண்டிருக்கலாம்.

பொன்மகள் வந்தாள் – திரைப்படம் ஓகேதான்