மக்கள் அனைவரும் என் பாட்ட கேட்டுதானே உயிர் வாழ்றீங்க. இசைஞானி இளையராஜா ஆணவ பேச்சு

தனது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் உள்ள E.V.P FILM CITY யில் ஒரு பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நேற்று நள்ளிரவை நடத்தினார் இசைஞானி இளையராஜா.

6 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில்
போக்குவரத்து நெரிசல் காரணமாக 8 மணிக்குதான் 
நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது

நிகழ்ச்சி அரங்கில் வாட்டர் பாட்டில் கூட கிடைக்கவில்லை. இதனால் மக்கள் பலரும் தொந்தரவுக்கு ஆளாகினர்.

இந்நிலையில் ஒருவர் மேடை அருகே வந்து ஒருவருக்கு தண்ணீர் கொடுத்து சென்றார். அவரை பார்த்த இசைஞானி இளையராஜா பாடலை நிறுத்தி விட்டு அவரை கூப்பிட்டு கண்டித்தார்.

அப்போது பேசும்போது… இதுபோன்ற இடைஞ்சல்களை செய்யாதீர்கள். நான் 5 மணி நேரம் நின்று கொண்டுதான் இசை கச்சேரி நடத்துகிறேன். என் பாட்டை கேட்டுதானே நீங்கள் நீங்கள் அனைவரும் உயிர் வாழ்கிறீர்கள்.

உங்கள் வாழ்க்கை முழுவதும் தானே என் பாடல்களே தானே உள்ளது என பேசினார் இளையராஜா.

இவரின் இசையில்லாமல்
மக்களாகிய எங்களால் உயிர் வாழ முடியாதா? எனவும் சிலர் விவாதிக்க ஆரம்பித்தனர். அவரின் இந்த பேச்சில் நாகரிகமாக வேண்டும் அங்கு கூடியிருந்த மக்களிடையே  சலசலப்பை ஏற்படுத்தியது.