மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்நாள் பரிசு ஒரு லட்சம்

மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதியின் 41வது பிறந்தநாளை ஒட்டி ஒரு லட்ச ரூபாய்க்கு மேலான பரிசுப் போட்டிகளை திரைப்படம் டாட் காம் இணைய இதழ் அறிவித்துள்ளது.

இந்தப் போட்டிகளில் விஜய் சேதுபதியை வரையும்  ஓவியப்போட்டி, மிமிக்ரி போட்டி, டிக்டாக் போட்டி மற்றும் மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதியை குறித்த விமர்சன போட்டி இடம் பெறுகிறது.

இந்தப் போட்டிகள் ஒவ்வொன்றுக்கும் முதல் பரிசு ரூபாய் 10,000 ஆயிரம்
இரண்டாம் பரிசு ரூபாய் 5.000 ஆயிரம் மூன்றாம் பரிசு ரூபாய் 3.000 ஆயிரம் என வழங்கப்படுகிறது.

இந்தப் போட்டிகள் தவிர பெண்களுக்காக பிரத்தியேகமாக ஒரு போட்டியும் நடத்தப்படுகிறது மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதியை எதனால் பிடிக்கும் என்று சிறப்பாகச் சொல்லும் 41 பெண்களுக்கு தலா 1,000 வீதம் பரிசு அளிக்கப் படுகிறது.

இந்த போட்டிக்கான படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி டிசம்பர் 30, 2019.

இந்தப் போட்டிகள் குறித்த மேலதிக விவரங்களுக்கு திரைப்படம் டாட் இன் என்ற இணைய தளத்தை சொடுக்கவும்.