மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணையும் திரைப்படம் குறித்து சேரன்*
தமிழ் சினிமா ரசிகர்களை தன்னுடைய யதார்த்தமான படங்கள் மூலம் ஈர்த்தவர் இயக்குனர் சேரன். இவர் பிரபல பொழுதுபோக்கு செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை வைத்து தான் எடுக்க போகும் படத்தின் மீது கவனம் செலுத்தி வருவதாகவும். இந்தப் படத்திற்காக விஜய் சேதுபதியுடன் இணையும் நாட்கள் மிக முக்கியமானதாக அமையும் எனவும் கூறினார். மேலும் தான் நடித்துள்ள ‘ராஜாவுக்கு செக்’ திரைப்படம் நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பரில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.










