மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்ப்பு
இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகவுள்ளது. இதில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். இந்நிலையில் இதற்கு விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியுள்ள அறிக்கையில் “நடிகர் விஜய் சேதுபதி சிறந்த நடிகர். பண்பாடு மிக்க, மனிதநேயமிக்க மனிதர். அப்படிப்பட்டவர் முத்தையா முரளிதரன் போன்ற ராஜபக்சேவின் அடிமையின் கதாபாத்திரத்தில் நடிப்பது வேதனை அளிக்கிறது. ஒரு தமிழினத்துரோகியை உலக அரங்கில் அடுத்த தலைமுறைக்கு நல்லவனாக-நாயகனாக காட்ட முயற்சிப்பது வரலாற்று பிழையாகத்தான் முடியும்” என்று அவர் தெரிவித்துள்ளார். வன்னி அரசு பதிவு செய்துள்ள பதிவின் இணைப்பு
https://www.facebook.com/100002670911661/posts/2326022504163424/?app=fbl