இந்து கடவுள்ளை பற்றி பேசி இந்துக்கள் மனதை புண்படுத்திய மக்கள் செல்வன் விஜய்சேதுபதி மீது நடவடிக்கை எடுக்க போலீசில் மனு.

சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு டிவி நிகழ்ச்சியில் பேசியிருந்தார் மக்கள் செல்வன் நடிகர் விஜய்சேதுபதி.

அதில்.. பேசியதாவது.

“கோயில்களில் சாமி சிலைகளை குளிக்க வைக்கும்போது (அபிஷேகம்) பார்க்க அனுமதிப்பவர்கள், உடை மாற்றும்போது மட்டும் அனுமதிப்பதில்லையே ஏன் ?” என்பதை ஒரு தாத்தா, பேத்தி கதை மூலம் கேள்வியாக கேட்டிருந்தார்.

இது வீடியோ தற்போது தான் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் இதை பரப்பி பல விதமான கமெண்டுக்களை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்துக்கள் மனதை புண்படுத்தும் விதமாக மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி பேசி வருகிறார்.

அவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்த அகில் இந்திய மகா சபை அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பான மனுவை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் அளித்துள்ளது.

அந்த மனுவில், மக்கள் செல்வன் நடிகர் “விஜய் சேதுபதி இந்து மத ஆகம விதிகளை பற்றி புரிந்து கொள்ளாமல் கேலி, விமர்சனம் செய்கிறார். தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள இந்து மத சம்பிரதாயங்களை பயன்படுத்தி வருகிறார்.

அவர் மீது வழக்கு பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!