மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ திரைப்படம் வெளியானது .*

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் சங்கத் தமிழன். விஜய் சந்தர் இயக்கியுள்ள இப்படத்தில் சூரி, நாசர், நிவேதா பெத்துராஜ், ராஷி கண்ணா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை விஜயா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரித்துள்ளார். தமிழகம் முழுவதும் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் படத்தை வெளியிட்டிருக்கிறார். நேற்று வெளியாக இருந்த ‘சங்கத்தமிழன்’ படத்திற்கும் தயாரிப்பாளர் மூலம் சிக்கல் வர, படம் வெளியாவதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டது. ஆனால் படத்தை நேற்று மாலைக்குள் ரிலீஸ் செய்துவிடுவேன் என அறிவித்திருந்தார் விநியோகஸ்தர் ரவீந்தர் சந்திரசேகரன். அதன்படி தயாரிப்பு தரப்பு உட்பட படம் ரிலீஸ் ஆவது தொடர்பான பிரச்சனைகளை தீர்த்த அவர், நேற்று இரவு படத்தை ரிலீஸ் செய்துவிட்டார்.தற்போது ‘சங்கத்தமிழன்’ தமிழகம் மட்டும் இன்றி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது. இதனால் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.