மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் நடிகை கனிகா!
இயக்குனர் வெங்கட கிருஷ்ணா ரோகாந்த் இயக்கத்தில், மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் நாயகியாக நடிகை மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் நடிகை கனிகா முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த படத்தின் மூலம் இயக்குனர் மகிழ் திருமேனி நடிகராக களமிறங்குவதாவும் தகவல் வெளியாகியுள்ளது.











