மதுமிதாவிடம் கவின் குழு மன்னிப்பு கேட்டார்களா ⁉
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் விதிமுறைகளை மீறியதால் பாதியிலேயே வெளியேற்றப்பட்ட நடிகை மதுமிதா. இவர் இயக்குனர் சேரன் மற்றும் நடிகை கஸ்தூரி தவிர இதர போட்டியாளர்கள் மீது குற்றம் சாட்டினார். இந்நிலையில், தங்களது செயலுக்கு நடிகர் கவின் குழுவினர் வருத்தம் தெரிவித்ததாக தெரிகிறது. இது குறித்து மதுமிதாவின் கணவர் மோசஸ், தனது ட்விட்டர் பக்கத்தில், “கேங் மனம் திருந்தி வருந்தி கேட்டுக்கொண்டதால். பரவிக்கிடக்கும் அவர்களின் மணத்தைப் பற்றி தயவுசெய்து யாரும் பேச வேண்டாம் மீண்டும் மணம் வீசினால் பார்ப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.
———–gang மனம் திருந்தி வருந்தி கேட்டுக்கொண்டதால்…பரவிக்கிடக்கும் அவர்களின் மணத்தைப் பற்றி தயவுசெய்து யாரும் பேச வேண்டாம் மீண்டும் மணம் வீசினால் பார்ப்போம்😊🙏
— madhumitha moses (@madhumithamoses) October 11, 2019











