மாநாடு படத்தில் சிம்புவிற்கு கங்கை அமரன் வில்லனா?
வந்தா ராஜாவா தான் வருவேன் படத்திற்கு பிறகு சிம்பு, வெங்கட்பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்காக தனது உடல் எடையை வெளிநாடு சென்று குறைத்துவிட்டு திரும்பியிருக்கிறார் சிம்பு.
மே மாதம் துவங்கிய வேண்டிய படப்பிடிப்பு ஜூன் மாதத்திற்கு தள்ளிப்போய் உள்ளது. இந்நிலையில், இந்த படத்தில் வெங்கட் பிரபுவின் தந்தையும், இயக்குனர், இசையமைப்பாளருமான கங்கை அமரன் வில்லனாக நடிப்பதாக செய்திகள் பரவின. ஆனால் வெங்கட்பிரபு மறுத்துள்ளார்.
மாநாடு படத்தில் என் தந்தை வில்லனாக நடிக்கவில்லை. வேறு ஒரு நடிகரை நடிக்க வைக்க பேசி வருகிறோம். இந்த மாதிரி வதந்திகள் பரவுவது வேடிக்கையாக உள்ளது என்று வெங்கட்பிரபு கூறியுள்ளார்.