மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நகைச்சுவை படமான ‘ஹவுஸ்ஃபுல் 4’ அக்டோபர் 25 முதல் !

ஹவுஸ்ஃபுல் 4 இன் தனிப்பட்ட போஸ்டர்கள் வெளியானதிலிருந்து, திரைப்படத்தைச் சுற்றி ஒரு பெரிய சலசலப்பு மற்றும் எதிர்பார்ப்பு
ஏற்பட்டது .ஹவுஸ்ஃபுல் சீரிஸ் பாலிவுட்டில் மிக வெற்றிகரமான நகைச்சுவை சீரிஸ்களில் ஒன்றாகும். இந்த நேரத்தில், இப்பொழுது  இந்த நான்காவது ஹவுஸ்ஃபுல் திரைப்படம் 600 ஆண்டுகளுக்குப் பின்னால் பயணிக்கும் ஒரு கால நகைச்சுவையின் தனித்துவமான கருத்துடன் வருகிறது மற்றும் கதாபாத்திரங்களின்  இரண்டு வெவ்வேறு அவதாரங்கள் இக்கதையை நகற்றும்.

திரைப்படத்தின் வெளியீட்டு தேதி நெருங்கி வருகின்றது .தயாரிப்பாளர் சஜித் நடியாட்வாலா படத்தை பற்றி  கூறியது என்னவென்றால், “ஹவுஸ்ஃபுல் 4 நகைச்சுவைக்கு புதிய எடுத்துக்காட்டுடன், ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்க உள்ளது, மேலும் படத்தின் பாடல்கள் பார்வையாளர்கள் மற்றும் சினிமாத்துறையில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்திய ரயில்வேயுடன் எங்களது மிகச் சமீபத்திய விளம்பர செயல்பாடு அளவிட முடியாத அளவிற்கு வெற்றிகரமாக , சுவாரஸ்யமாக இருந்தது.இப்போது வெளியீட்டிற்கு நாங்கள் அனைவரும் உற்சாகமாக இருக்கிறோம். ”

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸின் சி.இ.ஓ விஜய் சிங் கூறுகையில், “ஹவுஸ்ஃபுல் 4 ” படத்தின் விளம்பரங்கள் படம் போலவே அற்புதமாக இருந்தன – டிரெய்லர் வெளியீட்டு விழாவில் 15 ஆம் நூற்றாண்டின் கதாபாத்திரங்கள் வேடம் அணிந்த அனைத்து நடிகர்களின் நடிப்பும் புது எதிர்பார்ப்பை தூண்டியது . அக்‌ஷய் குமார் ஒரு வழுக்கை அவதாரத்துடன் கலக்கலாக பேசியது  #பாலா சேலஞ்சிற்கு வழிவகுத்தது !! இந்த தீபாவளி பண்டிகை காலத்தில் இப்படம் ரசிகர்கள் தங்கள் முழு குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் திரையரங்குகளுக்குள் நுழைந்து மகிச்சியுடன் படத்தை ரசிக்கலாம் .”.

படக்குழுவினர் திரைப்படத்தின் மூன்று பாடல்களை வெளியிட்டனர், இவை சமூக ஊடகங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றன, குறிப்பாக இரண்டாவது பாடல் ‘ஷைத்தான் கா சாலா’ இது #பாலா சேலஞ்சிற்கு வழிவகுத்தது மற்றும் எல்லா இடங்களிலும் இப்பாடல் கேட்கப்படுகிறது !

இந்த நகைச்சுவை படத்தில் அக்‌ஷய் குமார், ரித்தீஷ் தேஷ்முக், பாபி தியோல், கிருதி சனோன், பூஜா ஹெக்டே, மற்றும் கிருதி கர்பண்டா ஆகியோர் இரட்டை வேடங்களில் நடிக்கிறார்கள், கதை மறுபிறவியைச் சுற்றி வருகிறது. படத்தின் பாடல்களை சோஹைல் சென், ஃபர்ஹாத் சாம்ஜி, சந்தீப் ஷிரோத்கர் மற்றும் பஞ்சாபி ஹிட் ஸ்குவாட் ஆகியோரும்  பின்னணி இசையை ஜூலியஸ் பாக்கியமும் கையாண்டுள்ளனர். முறையே ஒளிப்பதிவு மற்றும் எடிட்டுங்கை சுதீப் சாட்டர்ஜி மற்றும் ராமேஸ்வர் எஸ். பகத் கையாண்டுள்ளனர்.“

ஹவுஸ்ஃபுல் 4 சஜித் நடியாட்வாலாவின் நடியாட்வாலா கிராண்ட்சன் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது மற்றும் ஃபர்ஹாத் சாம்ஜி படத்தை இயக்கியுள்ளார், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளனர். படம் இந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட உள்ளது.