மீண்டும் இசையமைப்பாளர் அனிருத் இசையில் பாடுகிறார் நடிகர் விஜய் ‼*

நடிகர் விஜய்யின் தளபதி 64-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்தப் திரைப்படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது. வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் இந்தப் படத்தில் கதாநாயகியாக மாளவிகா மேனன் நடித்து வருகிறார். இந்நிலையில் அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தில் விஜய் ஒரு பாடல் பாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக அனிருத் இசையில் ‘கத்தி’ படத்தில் “செல்பி புள்ள’” பாடலை விஜய் பாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.