மீண்டும் காவலராக களமிறங்குகிறார் நடிகர் அருண் விஜய்

அஜித்குமார், விஜய் அறிமுகமான காலகட்டத்தில் அறிமுகமானாலும் வெற்றிக்காக பல காலம் போராடியவர் நடிகர் அருண் விஜய். இவர் சமீபகாலமாக நடிக்கும் படங்கள் அனைத்தும் வெற்றி பெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குநர் ஜிஎன்ஆர் குமரவேலன் இயக்கத்தில், முற்றிலும் மாறுபட்ட இதுவரை இல்லாத வகையில் திரில்லர் படத்தில் நடிகர் அருண் விஜய் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதில் நடிகர் அருண் விஜய் காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளார்.