சினம் கொண்ட சிறுத்தையாக நடிகர் அருண் விஜய்!!

சென்னை 02 செப்டம்பர் 2012 சினம் கொண்ட சிறுத்தையாக நடிகர் அருண் விஜய்!!

இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான ‘யானை’ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘சினம்’
திரைப்படத்தின் டிரைலர் வெளியானது.

இந்த “சினம்” திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய் மிரட்டலான காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தை ஜி.என்.ஆர். குமரவேலன் என்பவர் இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படத்தை மூத்த நடிகர் விஜயகுமார் தயாரித்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக பல்லக் லால்வானி கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவர்களுடன் காளி வெங்கட், ஆர்.என்.ஆர் மனோகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த சினம் திரைப்படத்திற்கு
ஷபீர் இசையில் திரைப்படத்தின் பாடல்கள் உருவாகியுள்ளது.

திரைப்படத்தில் விறைப்பான காவல் துறை அதிகாரியாக நடித்திருக்கிறார் நடிகர் அருண் விஜய்.

க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில், மர்மமான முறையில் நிகழும் தொடர் கொலைகளுக்கான காரணங்களையும், கொலையாளியையும் கண்டறியும் காவல்துறை அதிகாரியாக நடிகர் அருண் விஜய் களமிறங்குவதை ட்ரெய்லர் உறுதி செய்கிறது.