மீண்டும் போலீசாக நடிக்கும் நடிகை நிவேதா பெத்துராஜ்⁉*

ஒருநாள் கூத்து படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ், தற்போது நடிகர் விஜய் சேதுபதியுடன் இவர் நடித்துள்ள சங்கத்தமிழன் படம் விரைவில் வெளியாக உள்ளது. டிக் டிக் டிக் படத்தில் ராணுவ அதிகாரியாக நடித்திருந்த நடிகை நிவேதா பெத்துராஜ், திமிரு புடிச்சவன் படத்தில் பெண் போலீசாக நடித்திருந்தார். இதனையடுத்து, தடம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கவுள்ள நடிகை நிவேதா பெத்துராஜ், தமிழில் வித்யா நடித்திருந்த போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கை கிஷோர் திருமலா இயக்குகிறார், ராம் பொத்தினேனி ஹீரோவாக நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.