நடிகை தமன்னாவின் தொழில் பக்தி பாராட்டுக்குரியது – சிரஞ்சீவி

சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் நடிகர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை நயன்தாரா. ஆனால், இந்தப் படத்தின் எந்த நிகழ்ச்சிக்கும், படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை நயன்தாரா வரவில்லை. அவரைப் போலவே படத்தில் நடித்திருந்த நடிகை தமன்னா, எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்தார்.

இந்நிலையில் இது குறித்து நடிகர் சீரஞ்சீவி கூறுகையில், படங்களில் நடிப்பதோடு மட்டும் தங்கள் பணி நிறைவடைந்து விடுவதாக சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அது தவறு. நடிகை நயன் தாரா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், நடிகை தமன்னாவின் கதாபாத்திரம் தான் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு அடுத்து அதிகம் முக்கியத்துவம் வாய்ந்தது. அவரது தொழில்பக்தி மற்றும் திறமையை கண்டு நான் வியந்தேன்” என்று கூறியுள்ளார்.

error: Content is protected !!