முகநூலில் நேரலையில் ஒளிபரப்பான ‘தர்மபிரபு’

இயக்குனர் முத்துகுமரன் இயக்கத்தில், முன்னணி கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்துள்ள படம் ‘தர்மபிரபு’. எமலோகத்தை கதையின் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில், இந்த படம் முகநூலில் நேரலையில் ஒளிபரப்பாகியுள்ளது. இது படக்குழுவினரை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.