இயக்குனர் மோகன் இயக்கத்தில் நடிகர் ரிஷி ரிச்சர்ட் மற்றும் ஷீலா ராஜ்குமார் நடிப்பில் பிப்ரவரி 28 அன்று வெளியான திரைப்படம் திரௌபதி.
ஜூபின் இசையமைக்க, மனோஜ் நாராயண் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த திரைப்படம்தான் டிரைலர் வெளியானபோதே சாதி பற்றிய திரைப்படம் என பரபரப்பாக பேசப்பட்டது. பல அரசியல் அமைப்புகள் எதிர்ப்புகள் தெரிவித்தன. இதுவே திரைப்படத்திற்கு பெரும் விளம்பரமாக அமைய எதிர்பார்ப்பு எகிறியது.
பா ம க ராமதாஸ், பா ஜ க எச். ராஜா உள்ளிட்டவர்கள் பட ரீலீசுக்கு முன்பே திரைப்படத்தை பார்த்து கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் இது வெளியான தியேட்டர்கள் திருவிழா கோலம் கண்டது.
முக்கியமாக புதுச்சேரி, கடலுர், சிதம்பரம், விழுப்புரம் உள்ளிட்ட பல தியேட்டர்களில் சில அமைப்புகள் மொத்த டிக்கெட்டையும் புக்கிங் செய்து படத்தை பார்த்து கண்டு களித்துள்ளனர்.
இந்த படத்தின் பட்ஜெட் ரூ. 70 லட்சத்தை கூட தாண்டவில்லையாம்.
ஆனால் படத்தின் முதல் நாள் வசூல் மட்டும் ரூ. 1 கோடியை கடந்துவிட்டதாக தகவல்கள் வந்துள்ளன.
திரௌபதி படத்தில் முன்னணி நடிகர்கள் இல்லாத நிலையில் இதன் வரவேற்பை கண்டு கோலிவுட்டே ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது