முருகப்பெருமானுக்கு உரிய பாடலான கந்த சஷ்டி கவசத்தை இழிவு படுத்தி அவதூறு பேச்சு இயக்குநர் வேலு பிரபாகரன் கைது.

முருகப்பெருமானுக்கு உரிய பாடலான கந்த சஷ்டி கவசத்தை இழிவு படுத்தி வீடியோ வெளியிட்டது. கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல்,

இதனையடுத்து தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சை உருவானது.

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கண்டனத்திற்கு முன்பே இந்த கறுப்பர் கூட்ட சேனலை சேர்ந்த சுரேந்தர் நடராஜன், செந்தில்வாசன் ஆகிய இருவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் இருவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.

மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய சோமசுந்தரம், குகன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர் .

இந்த நிலையில் திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன், கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் நிர்வாகிகளுக்கு ஆதரவாகவும் கந்த சஷ்டி கவசத்தை அவதூறாக பேசியிருக்கிறார்.

இதனையடுத்து பாரத் முன்னணி என்ற அமைப்பை சேர்ந்த சிவாஜி என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வேலுபிரபாகரனை கைது செய்ய வலியுறுத்தி புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இயக்குநர் வேலுபிரபாகரன் மீது மத உணர்வை தூண்டி கலகம் ஏற்படுத்துதல், சாதி மத இன ரீதியாக பேசி பிரச்சனை தூண்டிவிடுதல், அசாதாரண சூழ்நிலையை உருவாக்குதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

தற்போது சென்னை மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் விசாரணை நடந்து வருகிறது.