ரத யாத்திரையை அனுமதிக்கக்கூடாது திவ்யா சத்யராஜ்.

புரட்சித் தமிழன் சத்யராஜின் மகள் திவ்யா ஒரு பிரபலமான ஊட்டச்சத்து நிபுணர் அவர் கொரோனா நேரத்தில் தமிழ் மக்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவை இலவசமாக வழங்கி மகிழ்மதி என்ற இயக்கத்தை ஆரம்பித்து இருக்கிறார்.

சில வருடங்களுக்கு முன் மருத்துவத்துறையில் நடக்கும் முறைகேடுகளை பற்றியும் நீட் தேர்வை எதிர்த்து திவ்யா சத்யராஜ் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது இப்பொழுது ரத யாத்திரையை அனுமதிக்கக்கூடாது என்று கோரிக்கை வைத்துள்ளார்.

கொரோனா நேரத்தில் தமிழ்நாட்டில் ரதயாத்திரை நடந்தால் மக்களுக்கு கொரோனா பரவ வாய்ப்பிருக்கிறது.

கொரோனா நேரத்தில் ரத யாத்திரையை அனுமதிப்பது நியாயம் கிடையாது.

தமிழ் மக்களின் உடல் நலத்தின் மீதும் உயிர் மீதும் அக்கறை கொண்டுள்ள ஒரு ஊட்டச்சத்து நிருபராகவும் தமிழ் மகளாகவும் ரத யாத்திரையை எதிர்க்கிறேன்.

மதத்தை வளர்ப்பதில் இருக்கும் அக்கறை மக்களின் உயிர் மீதும் உடல் நலத்தின் மீதும் இல்லாதது வருத்தமாக இருக்கிறது.

error: Content is protected !!