ரத யாத்திரை தடை மன்னிப்பு கேட்கும்‌ எண்ணம்‌ எனக்கு இல்லை ஊட்டச்சத்து நிபுணர்‌ திவ்யா சத்யராஜ்.

சென்னை : 30 செப்டம்பர் 2020

புரட்சி தமிழன் நடிகர் சத்யராஜ்‌ அவர்களுடைய மகள்‌ திவ்யா ஒரு பிரபலமான ஊட்டச்சத்து நிபுணர்‌ என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

இவர்‌ கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக ஊரடங்கில் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் ஊரடங்கில் தமிழ்‌ மக்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவை இலவசமாக வழங்க ”மகிழ்மதி” என்ற இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார்‌.

பாரதி ஜனதா கட்சி சார்பில் திட்டமிடப்பட்ட ரத யாத்திரையை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது என தெரிவித்தார்.

இந்த தகவலை நமது இனையத்தளத்தில் பார்த்தோம்.

இந்த நிலையில் ரத யாத்திரை தடை கோரிக்கைக்காக மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறியுள்ளார்‌ திவ்யா சத்யராஜ்.

இதுபற்றி அவர் ஊட்டச்சத்து நிபுணர்‌ திவ்யா சத்யராஜ் கூறியதாவது:

கொரோனா நேரத்தில்‌ தமிழ்நாட்டில்‌ ரத யாத்திரை நடந்தால்‌ மக்களுக்கு கொரோனா பரவ வாய்ப்புகள்‌ இருக்கிறது.

கொரோன நேரத்தில்‌ ரத யாத்திரையை அனுமதிப்பது நியாயம்‌ கிடையாது.

தமிழ் மக்களின்‌ உடல்‌ நலத்தின்‌ மீதும்‌ உயிர்‌ மீதும்‌ அக்கறை கொண்டுள்ள ஒரு ஊட்டச்சத்து நிபுணராகவும்‌, தமிழ்‌ மகளாகவும்‌ ரத யாத்திரையை எதிர்க்கிறேன்‌.

மதத்தை வளர்ப்பதில்‌ இருக்கும்‌ அக்கறை மக்களின்‌ உயிர்‌ மீதும்‌ உடல்‌ நலத்தின்‌ மீதும்‌ இல்லாதது வருத்தமாக இருக்கிறது. ரத யாத்திரையை எதிர்த்ததற்காக மன்னிப்பு கேட்கும்‌ எண்ணம்‌ இல்லை.

இவ்வாறு திவ்யா சத்யராஜ் கூறி உள்ளார்.

error: Content is protected !!