லட்சுமி பாம்’  திரைப்படத்தினை OTT  இனையத்தில் வெளியிடத் திட்டம் நடிகர் இயக்குனர் ராகவா லாரன்ஸ்

நடிகை ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள ’பொன்மகள் வந்தாள்’திரைப் படத்தை நேரிடையாக இணையத்தில் ரிலீஸ் செய்யவுள்ளார்.

அப்பட தயாரிப்பாளர் நடிகர் சூர்யா.

கொரோனா ஊரடங்கால் உத்தரவால் திரையரங்குகள் திறப்பது தாமதம் ஆகும் என்பதால் இந்த முடிவை நடிகர் சூர்யா எடுத்துள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் நடிகர் சூர்யா ரூட்டை பாலோ செயது நடிகர் ராகவா லாரன்ஸ் அவரின் திரைப்படத்தை இணையத்தில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கியுள்ள ’லட்சுமி பாம்’ திரைப்படத்தை தானும் ஆன்லைனில் ஒளிபரப்ப பேச்சுவார்த்தை நடந்துள்ளதாம்.

டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனத்திடம் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

தற்போது எடிட்டிங், கிராபிக்ஸ் உள்பட போஸ்ட் புரடொக்ஷன் பணிகளை வீட்டிலிருந்தே எடிட்டர்கள் செய்து வருவதால் வருகிற ஜூன் மாதம் லட்சுமி பாம்’ ரிலீசுக்கு தயாராகி விடும் என கூறப்படுகிறது.