லேடி சூப்பர் ஸ்டார் நடிக்கவுள்ள திரைப்படத்திற்கு நான்கு இசையமைப்பாளர்கள் ⁉*

கோலிவுட் திரைத்துறையில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா தற்போது ‘தர்பார்’ மற்றும் ‘நெற்றிக்கண்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ‘மூக்குத்தி அம்மன்’ என்ற படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

முழுக்க முழுக்க நகைச்சுவை மையப்படுத்தி உருவாகவுள்ள இந்தப் படத்தை ஆர்.ஜே.பாலாஜி, இயக்குனர் ன்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்க உள்ளார். இந்நிலையில், இந்தப் படத்திற்கு நான்கு இசையமைப்பாளர்கள் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.