விஜய் அண்ணாகிட்ட பாக்குற அன்பு வெறித்தனம்.: நடிகர் கதிர்

அட்லி இயக்கத்தில் தந்தை மகன் என இரு வேடங்களில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் பிகில்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகப்பிரம்மாண்ட நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் பணியாற்றியவர்கள் படம் குறித்து பேசி வருகின்றனர்.

பாடலாசிரியர் விவேக்…

சிங்கப் பெண்கள் மத்தியில் விஜய் ஒரு சிங்கம் போல வாழ்ந்துள்ளனர்.

கலை இயக்குனர் முத்துராஜ்…

விஜய் சார் பெர்மான்ஸ்ல கிழிச்சுட்டாரு

எடிட்டர் ரூபன்..

நான் பிகில் படத்தை எடிட்டிங் செய்யும்போது தான் புட் பால் ரூல்ஸ் தெரிஞ்சிக்கிட்டேன்.

ஒளிப்பதிவாளர் விஷ்னு…

அவர் இந்த படத்துல ஆடியிருக்கிற ஆட்டமே வேற. விஜய் ரசிகனாக இருப்பது எனக்கு பெருமை

நடிகர் கதிர் பேசியதாவது…

உங்க அன்பின் அடையாளம் தான் விஜய் அண்ணா. உங்களோட ஒட்டு மொத்த அன்பை அவர் கிட்ட பாக்குறேன். அது ஒரு வெறித்தனம் என்றார்.