விஜய் சேதுபதி படத்தில் இணைந்தார் ‘பாகுபலி’ நடிகர்

நடிகர் விஜய் சேதுபதி, கிரிக்கெட் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். ‘800’ என தலைப்பிட்டுள்ள இந்த படத்தை இயக்குனர் எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கவுள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் ‘பாகுபலி’ பட நடிகர் ராணா டகுபதி தயாரிப்பாளராக இணைந்துள்ளார். இந்த தகவலை நடிகர் ராணா டகுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.