நடிகர் ராணா டகுபதியின் தம்பி அபிராம் டகுபதி கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

சென்னை 16 மே 2021

நடிகர் ராணா டகுபதியின் தம்பி அபிராம் டகுபதி கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

நடிகர் ராணா டகுபதியின் சகோதரரான அபிராம் டகுபதி, தனது தந்தை சுரேஷ் பாபு தயாரிக்கும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார்.

இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்த வெளியான பாகுபலி திரைப்படத்தில் வில்லனாக நடித்ததின் முலம் பிரபலமானவர் நடிகர் ராணா டகுபதி.

தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி நடிகராக இருக்கும் இவர், பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவின் மகன் ஆவார்.

நடிகர் ராணா டகுபதிக்கு அபிராம் டகுபதி என்கிற சகோதரரும் உள்ளார்.

இந்த நிலையில் நடிகர் ராணா டகுபதியின் சகோதரர் அபிராம் டகுபதி தெலுங்கு திரைப்பட உலகில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார்.

இந்த அபிராம் டகுபதி நடிக்கும் திரைப்படத்தை பிரபல இயக்குனர் தேஜா இயக்க உள்ளாராம்.

மேலும் அபிராம் டகுபதியின் தந்தை சுரேஷ் பாபு தான் இந்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளார்.

கொரோனா பரவல் குறைந்த பின் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாம்.

நடிகர் அபிராம் டகுபதி, ஸ்ரீ ரெட்டியின் மீ டூ புகாரில் சிக்கி பரபரப்பாக பேசப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.தான் அறிமுகமாகும் திரைப்படம் பற்றி அபிராம் டகுபதி கூறும்போது..

“என்னையும் நடிகனாக்கி பார்க்கவேண்டும் என்பது என் தாத்தாவின் ஆசை. அவர் உயிரோடு இருந்திருந்தால் அது முன்கூட்டியே நடந்திருக்கும்.

தற்போது எனது தந்தையின் ஆதரவுடன் நான் ஹீரோவாக அறிமுகமாகிறேன்”

என அபிராம் டகுபதி
தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!