விவசாயிகளுக்கு கட்டிடம் கட்டி கொடுக்கிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி

இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் இணைந்து நடிக்கும் படம் ‘லாபம்’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக விவசாயிகள் சங்க கட்டடம் ஒன்று தேவைப்பட்டுள்ளது. அப்போது மக்கள் செல்வன் விஜய்சேதுபதி அந்த கட்டிடத்தை செட்டாக போடாமல் உண்மையான கட்டிடத்தையே கட்ட சொல்லி இருக்கிறார். மேலும் படப்பிடிப்பு முடிந்ததும் அந்த கட்டிடத்தை அந்த ஊர் மக்களுக்கே கொடுக்க சொல்லி இருக்கிறார் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.