கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கும் ‘பப்பி’ பட நாயகன்

தலைவா’, ‘போகன்’, ‘வனமகன்’, ‘நெருப்புடா’, ‘கோமாளி’ உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த வருண், ‘பப்பி’ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்நிலையில், வருண் தற்போது கவுதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது

error: Content is protected !!