‘வெறித்தனம்’ பாடல்: மீண்டும் ARR மீது கடுப்பான விஜய் ரசிகர்கள்
விஜய் நடிப்பில் இதுவரை 62 படங்களில் நடித்து விட்டார். அவரது உதயா, அழகிய தமிழ் மகன், மெர்சல், சர்கார் உள்ளிட்ட படங்களுக்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
தற்போது உருவாகி வரும் பிகில் படத்திற்கும் இவரே இசையமைப்பாளர்.
இந்த நிலையில் சிங்கப்பெண்ணே என்ற பாடல் வெளியானது. இந்த பாடலை ஏஆர். ரஹ்மான் பாடியிருந்தார்.
பெண்களை போற்றும் வகையில் இருந்த இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது வெறித்தனம் என்ற பாடலை வெளியிட்டுள்ளனர்.
இந்த பாடலை விவேக் எழுதியுள்ளார். இந்த பாடலுக்கு விஜய் ரசிகர்களுக்கே பிடிக்கவில்லையாம். ஆனால் வெளியில் சொல்ல முடியாமல் சூப்பர்… வெறித்தனம் என வெளியில் சொல்லி வருகின்றனர்.
இதற்கு முன் வெளியான விஜய்யின் சர்கார் படத்திற்கும் ஏஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். அதில் இடம்பெற்ற சிம்டாக்காரன் என்ற பாடலும் விஜய் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.
மோசமான நெகட்டிவ் கமெண்ட்களை பெற்றது. தற்போது இதே நிலைதான் வெறித்தனம் பாடலுக்கும் ஏற்பட்டுள்ளது. நிறைய மீம்ஸ்களை உருவாக்கி கலாய்த்து வருகின்றனர்.
இதனால் விஜய் ரசிகர்கள் நொந்து போய் இருக்கிறார்களாம்.
ஏஜிஎஸ் தயாரித்து வரும் பிகில் படத்தை அட்லி இயக்கி வருகிறார்.











