தீபாவளிக்கு போட்டி போடும்: விஜய்யை முந்தும் விஜய்சேதுபதி; கார்த்தி கன்பார்ம்
இந்தாண்டு தீபாவளிக்கு விஜய் நடித்துள்ள பிகில், விஜய்சேதுபதி நடித்த சங்கத்தமிழன் மற்றும் கார்த்தி நடித்த கைதி ஆகிய படங்களும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
எனவே தீபாவளிக்கு கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இதிலிருந்து சங்கத்தமிழன் படம் விலகும் எனத் தெரிகிறது.
அதாவது ஒரு வாரத்திற்கு முன்பே படம் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்பகிறது.
சிட்டியில் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டர்களை இப்போதே பிகில் படமும் கைதி படமும் கைப்பற்றிவிட்டதால் சங்கத்தமிழனுக்கு எதிர்பார்த்த தியேட்டர்கள் கிடைக்கவில்லையாம்











