ஹவுஸ்ஃபுல்-4 படத்திலிருந்து முதல் பாடலான “Ek Chumma” பாடல் வெளியானது!

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் நதியாட்வாலா கிராண்ட்சன் என்டர்டெயின்மென்ட் இனைந்து தயாரித்துள்ள படம் ஹவுஸ்ஃபுல் 4. ஃபர்ஹாத் சாம்ஜி இயக்கிய நகைச்சுவைத் திரைப்படமான இது ஹவுஸ்ஃபுல் ஃபிரான்சிஸின் நான்காவது பகுதியாகும். அக்‌ஷய் குமார், ரித்தீஷ் தேஷ்முக், பாபி தியோல், கிருதி சனோன், பூஜா ஹெக்டே மற்றும் கிருதி கர்பண்டா ஆகியோர் முக்கிய  கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் .
தற்போது இந்த படத்திலிருந்து Ek Chumma’  எனும் பாடல் வெளியாகி உள்ளது

 
இந்தப் பாடல் உருவான விதம் பற்றிய தகவல்கள்,

‘Ek Chumma’ பாடல் யூகே வில் 5 முக்கிய இடங்களில் எடுக்கப்பட்டுள்ளது..

இந்த பாடல் உருவாக்குவதற்காக 750 நபர்களும் ,600 நடனக்கலைஞர்கள் பங்கு பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..

ஃபர்ரா கான் நடன  இயக்கத்தில் இந்த பாடலுக்கு சோஹைல் சென் இசை  அமைத்துள்ளார்.. சமீர் அஞ்சான் பாடல்  வரிகளை எழுதியுள்ளார்..சோஹைல் சென் , அல்டமாஸ் ஃபர்டி & ஜோடிகா தங்டி ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர். தற்போது இப்பாடல் ரசிகர்களுக்கிடையே   நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .