இணையத்தை வைரலாகும் ஆக்ஷன் கிங் அர்ஜூன்-ஹர்பஜன் சிங்-லொஸ்லியாவின் ‘பிரண்ட்ஷிப்’
இந்த திரைப்படத்தை இரட்டை இயக்குனர்கள் ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர்.
நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜூன் முக்கிய வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் பிரண்ட்ஷிப்.
இந்த திரைப்படம் முழுக்க முழுக்க கோயம்பத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் படமாக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக தமிழ்நாட்டில் பிரபலம் ஆன லொஸ்லியாவுக்கு கதாநாயகியாக இதுதான் முதல் திரைப்படம்.
அதுபோல் கிரிக்கெட் வீர்ர் ஹர்பஜன் சிங் இந்த திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
இதற்கு முன்பு நடிகர் சந்தானத்தின் டிக்கிலோனா என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
அந்த திரைப்படமும் இன்னும் வெளியாகவில்லை.
பஞ்சாபை சேர்ந்த ஹர்பஜன் சிங் படிப்பை பாதியில் படிப்பை நிறுத்திவிட்டு பின்னர் மீண்டும் தொடர கோயம்பத்தூரில் படிக்க வருகிறார்.
அந்த கல்லூரியில் நடிகை லொஸ்லியாவும் படிக்கிறார்.
இவர்களுடன் ஒரு ப்ரெண்ஷிப் கேங் இணைகிறது.
அதுதான் இந்த திரைப்படத்தின் கதைக்களம் என்றும் கிரிக்கெட்டும் இதில் முக்கியத்துவம் பெறுகிறதாம்.
இந்த திரைப்படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜீன் கதாபாத்திரம் குறித்த எந்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
தற்போது ‘பிரண்ட்ஷிப்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோசன் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.











