ஐந்து மொழிகளில் தயாராகிறது ஜீவன் நடிக்கும் பாம்பாட்டம் V.C. வடிவுடையான் இயக்குகிறார்.
6.2, ஓரம்போ, வாத்தியார் போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த V.பழனிவேல் தனது
வைத்தியநாதன் பிலிம் கார்டன் என்ற பட நிறுவனம் சார்பாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மளையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படம் ” பாம்பாட்டம் “

காக்க காக்க, திருட்டுப்பயலே, நான் அவனில்லை போன்ற வெற்றி படங்களில் நடித்த ஜீவன் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
இதுதான் இவர் நடிக்கும் முதல் ஹாரர் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து ஹாரர் படங்களை இயக்கி வரும் வி.சி வடிவுடையான் தற்போது ஹாரர் கலந்த திரில்லர் கதையை மையமாக வைத்து மிக பிரம்மாண்டமான பொருட்ச் செலவில் உருவாகும் இந்த படத்தை இயக்குகிறார்.

இது இதுவரை ஹாரர் படங்களில் பார்த்திராத திரைக்கதையை இந்த படத்தில் பார்க்கலாம். அந்தளவிற்கு கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த படத்தை இயக்கவுள்ளார் வி.சி.வடிவுடையான். ஐந்து மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் ஐந்து மொழிகளிலும் இருந்து முன்னணி நடிகர்கள் நடிக்க இருக்கிறார்கள். இந்த படத்தின் கதையை கேட்ட நடிகர் ஜீவன் உடனே நடிப்பதற்கு ஒப்புக் கொண்டுள்ளார். முண்ணனி கிராபிக்ஸ் நிறுவனமொன்று இந்த படத்திற்கான கிராபிக்ஸ் காட்சிகளை வடிவமைக்க இருக்கிறார்கள்.
வசனம் – பா.ராகவன்
ஒளிப்பதிவு – இனியன் J. ஹரீஸ்
இசை – அம்ரீஷ்
பாடல்கள் – யுகபாரதி
எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ்
ஸ்டண்ட் – சூப்பர் சுப்பராயன்
இணை தயாரிப்பு – A.பன்ணை இளங்கோவன்
தயாரிப்பு – V.பழனிவேல்
மற்ற நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், மும்பை போன்ற இடங்களில் இம் மாதம் நடைபெற உள்ளது என்கிறார் இயக்குனர் V.C.வடிவுடையான்.
Related posts:
இயக்குநர் வடிவுடையான் இயக்கத்தில் ஜீவன் இரட்டை வேடங்களில் நடிக்கும் “ பாம்பாட்டம் “ ஐந்து மொழிகளில் தயாராகிறது.
V.C.வடிவுடையான் இயக்கும் பாம்பாட்டம் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பில் மல்லிகா ஷெராவத்
அருவா சண்ட பட நாயகனின் அடுத்த திரைப்படம் ஜந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக தயாராகிறது.!!!
ஹாலிவுட் தரத்தில் மிரட்டும் ‘பாம்பாட்டம்’ திரைப்படத்தில் 120 அடி நீள ராட்சத பாம்பு செய்யும் அட்டகாசம் இந்திய சினிமாவில் பார்க்காத ஆச்சரியம்.!!
நான்கு வருடங்களுக்கு பிறகு வருகிறார் ஜீவன்
லெஜண்ட் சரவணன் நடிக்கும் ‘தி லெஜண்ட் திரைப்படம் உலகெங்கும் ஜூலை 28 அன்று ஐந்து மொழிகளில் 2500 திரையரங்குகளில் வெளியாகிறது!!!
100 கோடி சம்பளம் வாங்கும் நடிகரால் தமிழ் திரைப்பட துறை நல்லா இருக்காது ’பாம்பாட்டம்’ விழாவில் போட்டு தாக்கிய கே.ராஜன்.!!
ஐந்து மொழிகளில் தயாராகும் ‘இக்ஷு’ டீசரை வெளியிட்ட போலீஸ் அதிகாரி ராஜேஸ்வரி!
இயக்குனர் A.வெங்கடேஷ் இயக்கத்தில் நடிகர் விமல் நடிக்கும் ஹாரர் படம் V.பழனிவேல் தயாரிக்கிறார்.
1500-க்கும் மேற்பட்ட அதிகமான திரையரங்குகளில் சக்ரா தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் இன்று வெளியாகியுள்ளது.

