ஒரே ஒரு ரூபாய் சம்பளத்தில் நடிக்கும் நடிகை ஆர்த்தியின் வெய்ட்டான அதிரடி ஆஃபர்

சின்ன சின்ன வேடங்கள் தான் என்றாலும் தனது முத்திரை ஒவ்வொரு திரைப்படத்திலும் தவறாமல் பதித்து வருபவர் நடிகை ஆர்த்தி.

இவர் அண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார்.

தற்போது கொரானா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவால் ஒட்டு மொத்த தமிழ் திரைப்பட உலகமும் நஷ்டத்தில் மூழ்கியுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு முன்னணி நடிகர்கள் மற்றும் டெக்னீசியன்கள் தங்கள் சம்பளத்தில் ஒரு பகுதியை குறைத்துக் கொள்ள வேண்டும் என தயாரிப்பாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இயக்குனர் ஹிரி, நடிகர்கள் விஜய் ஆண்டனி, ஹரிஷ் கல்யாண் உதயா உள்ளிட்டவர்கள் சம்பளத்தை குறைத்துக் கொள்வதாக அறிவித்தனர்.

மற்ற நடிகர்கள் இயக்குனர்கள் ஊதியத்தில் 25 முதல் 40 சதவீதம் வரை ஊதியத்தை குறைத்து கொள்ளும் நிலையில் நடிகர் அருள்தாஸ் டிசம்பர் மாதம் வரை ஊதியம் வாங்காமல் நடித்து தருகிறேன் எனக் கூறினார்.

இந்த நிலையில் நடிகை ஆர்த்தி ஒரு வீடியோவில் தனது சம்பளத்தில் ஒரே ஒரு ரூபாய் மட்டும் கொடுத்தால் போதும் என தெரிவித்துள்ளார்.

ஒரு வருடத்திற்கு அவர் இந்த சம்பளம் மட்டும்தான் வாங்குவாராம். வேறு எந்த நிபந்தனைகளும் இல்லை என தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறைந்த பட்சம் 10 சின்ன காமெடி நடிகர்களுக்கு வாய்ப்பு அளிக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

CLOSE
CLOSE
error: Content is protected !!