சன் டி.வி. நிறுவனத்தினர் மட்டும் தங்கள் தொழிலாளர்கள் ஊதியத்தில் எந்த குறைப்பும் செய்யாமல் முழுமையாக வழங்கியுள்ளார்.

நல்ல மனம் கொண்டவர்களே உங்களுக்கு தெரியும் கடந்த சில மாதங்களாக ஒட்டுமொத்த உலகத்தையும் கொரோனா புரட்டிப்போட்டிருக்கிறது.

இதனால் தொழில்கள் முடங்கி கிடக்கின்றன.அத்தியாவசிய சேவை பிரிவில் மீடியா ரொம்பவே சிக்கலை சந்தித்துள்ளது.

பல டிவி. சேனல்கள், நாளிதழ்கள், பத்திரிக்கை நிறுவனங்கள் பணியாளர்களின் சம்பளத்தில் 40 சதவீதம் வரை குறைத்திருக்கின்றன.

இந்த சிக்கலான நேரத்திலும் சன் டி.வி. நிறுவனத்தினர் மட்டும் தங்கள் தொழிலாளர்கள் சம்பளத்தில் எந்த குறைப்பும் செய்யாமல் முழுமையாக கொடுத்திருக்கிறார்கள்.

அது மட்டுமில்லாமல் கொரோனோ நேரத்தில் விரும்பி வந்து வேலை செய்தவர்களுக்கு முழு சம்பளத்துடன் ஊக்கத்தொகையும் கொடுத்திருக்கிறார்கள்.

வேலைக்கு வராத, வரமுடியாத தொழிலாளர்களுக்கும் முழு சம்பளத்தை கொடுத்திருக்கிறார்கள்.

இதனால் ஆயிரக்கணக்கான அவர்களின் ஊழியர் குடும்பங்கள் நிம்மதியுடன் இருக்கின்றன.

வேலைக்கு வந்த ஒவ்வொரு ஊழியருக்கும் பாதுகாப்பு உபகரணங்களையும் தந்து தங்கும் வசதியும் செய்திருக்கிறார்கள்.

பலரும் அறியாத இன்னொரு செய்தி சன் டி.வி. அலுவலகத்தில் வேலை செய்யும் அனைத்து ஊழியர்களுக்கும் மூன்று வேளையும் உணவு தருகிறார்கள்.

மதியம் சைவம் அசைவம் இரண்டுமே அங்கு உண்டு.

கொரோனாவால் ஊரடங்கில் வேலையின்றி தவிக்கும் தின ஊதியத்தை மட்டுமே நம்பியுள்ள பல்லாயிரக்கணக்கான சின்னத்திரை தொழிலாளர்கள் தங்கள் நிறுவனத்திற்கு வேலை செய்தாங்களா இல்லையா என்று பார்க்காமல் வாராவாரம் அவர்கள் வீட்டுக்கு தேவையான மளிகை பொருள்களை தந்து உதவி வருகிறார்கள்.

நாடு இன்னல்களை சந்திக்கும் ஒவ்வொருமுறையும் சன் டி.வி. நிறுவனத்தினர் கோடிக்கணக்கில் நிதியளித்து வருவது நமக்கெல்லாம் தெரிந்ததே.. இம்முறையும் கொரோனா துயர் துடைக்க 10 கோடி ரூபாய் நிதி அளித்ததும் தொலைக்காட்சி நிறுவனங்களில் சன் டி.வி. நிறுவனத்தினர் மட்டும்தான்

இந்த இக்கட்டான நேரத்திலும் லாப நஷ்டம் பாக்காத இவர்களை பாராட்ட வேண்டும். நல்ல விஷயம் யார் செய்தாலும் பாராட்ட வேண்டும் என்பார்களே,

நல்ல மனம் படைத்தவர்கள் நிச்சயம் இவர்களை பாராட்ட வேண்டும். அந்நிறுவனத்தின் ஆயிரக்கணக்கான ஊழியர் குடும்பங்கள் நிம்மதியாக சந்தோஷமாக நிச்சயம் அவர்களை வாழ்த்தும்.

error: Content is protected !!