சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 168வது திரைப்படத்தில் இணையும் பிரபலங்கள் ‼*
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 168வது படத்தை சிவா இயக்குகிறார். ரஜினி இமயமலையில் இருந்து திரும்பியதும் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாக உள்ளது. மேலும், கிராமத்து செண்டிமென்ட் கதையில் இந்த படம் உருவாகும் நிலையில், சந்திரமுகிக்குப் பிறகு நடிகை ஜோதிகா இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரைத் தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேசும் மற்றொரு நாயகியாக நடிப்பதாக கூறப்படுகிறது.











