செய்யும் தொழில் மீதான பற்றும் தான் என்னை இப்போது உற்சாகமாக்கி வருகிறது நடிகர் மன்சூரலிகான்
நடிகர் மன்சூர் அலிகான் தான் கதாநாயகனாக நடிக்க இருந்த கைதி பட வாய்ப்பு பறிபோனதிலிருந்து, கிடைக்கும் அதிரி, புதிரி நகைச்சுவை வேடங்களில் பட்டையைக்கிளப்பிக் கொண்டிருக்கிறார்.
சமீப காலமாக போராட்டம் வழக்கு ஜெயில், தேர்தல் பிரச்சாரம் என்று சென்று கொண்டிருந்த அவர் தற்போது படப்பிடிப்புத் தளம் வீடு என தன் கவனம் முழுதுவதையும் நடிப்பிலே செலுத்தத் துவங்கி இருக்கிறார். பெரும்பாலும் அலைபேசியில் கூட அவரை பிடிக்க முடியவில்லை.அவருக்கு அழைத்தால் அவரது மேனஜர் தான் போனை எடுக்கிறார். நீண்ட முயற்சிக்குப் பிறகு மன்சூர் அலிகானைத் தொடர்பு “ஏன் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்குறீர்கள்?” என்று கேட்டபோது,
“என் மகளுக்குத் திருமண வரன் பார்த்துக்கொண்டிருக்கிறேன். மகளுக்கு நீதிபதி ஆக வேண்டும் என்பது கனவு. அதற்காக அவர் படித்துக் கொண்டிருக்கிறார். படிப்பின் போதே திருமணம் நடத்தி வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். மேலும் இப்போது நிறைய படங்களிலும் நடித்து வருகிறேன். கெளதம் மேனன் இயக்கும் படம், இயக்குநர் சற்குணத்தின் படம், தங்கர் பச்சான் இயக்கும் படம், ரெஜினா கசன்ட்ராவோடு ஒரு படம், விமல், விக்ரம் பிரபு ஆகியோரின் படங்களிலும் நடித்து வருகிறேன். மனிதர்கள் மீதான அன்பும் செய்யும் தொழில் மீதான பற்றும் தான் என்னை இப்போது உற்சாகமாக்கி வருகிறது. சினிமா வாழ்விலும் என் வீட்டிலும் இன்னும் பல நல்ல செய்திகள் வரும்” என்றார்
Related posts:
வடிவேலு, சந்தானத்தை தொடர்ந்து கதைநாயகனாக நடிக்கிறார் ” மன்சூரலிகான் “
வாழ்க விவசாயி’ படம் என்னை வாழவைக்கும் :நடிகர் அப்புகுட்டி
இயக்குனர் ஷங்கர் மீதான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு
நடிகர் சிம்பு மீதான குவியும் புகார்கள் குறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் விசாரணை
தயாரிப்பாளர் சங்கத்தினர் என்னை அழிக்க பார்க்கிறார்கள் – வடிவேல்
என் குடும்பத்தாரை விட என்னை கமல் அதிகம் நம்புகிறார் – கடாரம் கொண்டான் விழாவில் இயக்குனர் ராஜேஷ் ம செல்வா பெருமிதம்
நான் நடித்த படங்களிலேயே ‘கண்ணாடி’ படம் தான் தயாரிக்கத் தூண்டியது – நடிகர் சந்தீப் கிஷன்
பேஸ்புக் மூலம் தான் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நடிகை நிம்மி ஓபன் டாக்*
இப்போது சினிமா உட்பட பல இடங்களில் ஜாதி அதிகமாகி விட்டது ” புறநகர் ” இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் கே.பாக்கியராஜ் பேச்சு
என்னை தவறாக சித்தரிக்க வேண்டாம் – நடிகை சோனா வேண்டுகோள்!

