தலைவர் 168 பூஜை; ரஜினிகாந்த், குஷ்பூ, மீனா, பங்கேற்பு; கீர்த்தி சுரேஷ் – சூரி பூஜைக்கு வரவிவ்லை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள தலைவர் 168 திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

முதன்முறையாக ரஜினிகாந்த் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இமான் இசையமைக்கிறார்.

இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு பூஜை உடன் இன்று(டிச.,11) சென்னையில் துவங்கியது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகைகள் மீனா, குஷ்பு, இயக்குனர் சிவா, இசையமைப்பாளர் இமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆனால் பட பூஜையில் கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை.

நாளை ரஜினிகாந்தின் பிறந்தநாள் அவர் ஊரில் இருக்கமாட்டார் என்பதை முன்பே அறிவித்திருந்தார்.

டிசம்பர் 2ஆம் வாரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது-

error: Content is protected !!