திரைப்படம் புரோமோசனுக்கு வரலேன்னா பணத்தை திருப்பி கொடுங்க நடிகை த்ரிஷாவுக்கு டி.சிவா எச்சரிக்கை

24 ஹவர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் திருஞானம் இயக்க த்ரிஷா நடித்துள்ள படம் ‘பரமபதம் விளையாட்டு’.

இப்படத்தின் பிரி புரமோஷன் விழா சென்னையில் இன்று சத்தியம் திரையரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களும், படக்குழுவினர்களும் கலந்துக் கொண்டனர். ஆனால் நடிகை த்ரிஷா விழாவுக்கு வரவில்லை.

இதில் தயாரிப்பாளரும் நடிகருமான டி.சிவா பேசும்போது, ‘நான் இன்னும் படம் பார்க்கவில்லை. ஆனால், படம் பார்த்த என் நண்பர்கள் சிறப்பாக இருக்கிறது என்று கூறினார்கள்.

பெரிய கதாநாயகன் இல்லாமல், விளம்பர நோக்கோடும் இல்லாமல், ஆனால், நட்சத்திர அந்தஸ்த்தோடு இப்படத்தை இயக்கியிருக்கிறார் திருஞானம்.

இப்படிப்பட்ட படத்தின் விளம்பரத்திற்கு நடிகை திரிஷா வரவில்லையென்பது வருத்தத்திற்குரிய விஷயம். தொடர்ந்து அவர் விளம்பரத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்காவிட்டால் சம்பளத்தில் இருந்து ஒரு பகுதியை தயாரிப்பாளருக்கு திருப்பித்தர வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பாக எச்சரிக்கை விடுக்கிறேன்’ என பேசினார். தயாரிப்பாளர் டி.சிவா

error: Content is protected !!